தொடர் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2023

தொடர் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ ஆலோசனை

அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சேர்ந்து, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பாக போராடி வருகின்றன. இந்த கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து, ஆட்சிக்கு நெருக்கடி தரப்பட்டது.அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., சார்பில், ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும், வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து,


 இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்னும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கடும் அதிருப்தியில் உள்ளன.இந்நிலையில், கோரிக் கைகளை வலியுறுத்தி, வரும் 28ம் தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அப்போது, மூன்று லட்சம் பேரை திரட்டி, சென்னையில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டவும், தி.மு.க., அரசுக்கு தங்களின் வலுவை காட்டவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.


இதன் பிறகும், கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால், பொது தேர்வுகள் முடிந்ததும், லோக்சபா தேர்தலுக்கு முன், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளதாக, ஜாக்டோ ஜியோ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

1 comment:

  1. Hi all good afternoon and happy merry christmas. All the best for all. Win and goals

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி