நீங்க பாடம் நடத்துங்க மேடம் ;மாணவராக மாறிய கமிஷனர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2023

நீங்க பாடம் நடத்துங்க மேடம் ;மாணவராக மாறிய கமிஷனர்!

கோவை: குப்பக்கோணாம்புதுார் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து, பயிற்றுவிப்பு முறையை கவனித்த கமிஷனர், 100 சதவீதம் மதிப்பெண் பெற அறிவுரை வழங்கினார்.


மாநகராட்சி மேற்கு மண்டலம், 45வது வார்டுக்கு உட்பட்ட குப்பகோணாம்புதுார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.


இப்பள்ளியில் நேற்று மதியம், 'விசிட்' செய்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பயிலும் வகுப்பறைக்கு சென்றார்.


அங்கு சமூக அறிவியல் பாடம் ஆசிரியர் நடத்திக்கொண்டிருக்க, மாணவர்கள் அருகே அமர்ந்துகொண்டார்.


ஆசிரியரை பாடம் நடத்தக்கூறிய அவர், முடிவில் மாணவர்களின் கல்வித்திறனை சோதனை செய்தார். பாடத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், பொதுத் தேர்வில், 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டுமென, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


முன்னதாக, பள்ளியில் உள்ள வருகை பதிவேடுகளை ஆய்வு செய்ததுடன், மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவை சுவைத்து பார்த்தார்.


உதவி கமிஷனர் சந்தியா, மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன், கல்விக் குழு தலைவர் மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

3 comments:

 1. BRTE BEO DEO CEO கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை பார்வையிட இருக்கிறார்கள்.

  ஆசிரியர்களோ அல்லது கல்வித்துறை அதிகாரிகளும் வேறு துறைகளையும் அலுவலகத்திற்கு சென்று பார்வையிடுகிறார்களா?


  ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இப்படி?

  கல்வித் துறை அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்திற்கு ஊராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று பார்வை இடுகிறார்களா?  பள்ளிக்கல்வித்துறை தவிர்த்து பிற துறை சார்ந்தவர்கள் பள்ளியை பார்வையிட கூடாது என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. கதவு திறந்து கடந்துச்சு இது ஒரு குத்தமா?

   Delete
 2. ஆசிரியர்கள் மட்டும் அடிமைகள். மாநகராட்சிக்கு அதிகாரிக்கு, பள்ளியில் ஆய்வு செய்ய சட்டம் இருக்கா? சங்கங்கள் , சந்தா மட்டும் வசூல் பண்ணி சாப்பிடுங்க. என்ன பண்ணிட்டு இருக்கீங்க. ஒரு அறிக்கை ஆவது விடுங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி