காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படும்: அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2023

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படும்: அமைச்சர்

காலியாக உள்ள ஆசிரியர், விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.சர்வதேச சிறு தானிய ஆண்டை முன்னிட்டு புதுச்சேரி அரசு பள்ளிக்கல்விதுறை சார்பில் மண்டல அறிவியல் மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, இந்திரா நகர், இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி நடந்தது.கடந்த 2 நாட்கள் நடந்த மாநில அளவிலான கண்காட்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. 


சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார்.கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:புதுச்சேரி கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ. 900 கோடி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு போட்டி தேர்வுகளில் நம் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சி.பி.எஸ்.இ., பாட திட்டம் அடிப்படையாக உள்ளது.அதனால் மாநிலம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கொண்டு வந்துள்ளோம். பல ஆண்டுகளாக காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளியில் 143 பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடம் எந்தவீத தலையீடு இன்றி திறமை, தகுதி அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.தற்போது 300 பட்டதாரி ஆசிரியர், 67 மொழி ஆசிரியர், 91 விரிவுரையாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பினால் தான் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை கொடுக்க முடியும். அதனால் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., பாட திட்டம் பயிற்சி அளிக்க ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவற்றை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற்று தலை சிறந்தவர்களாக உருவாகி நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கூறினார்.அரசு கொறடா ஆறுமுகம், கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி துணை முதல்வர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. பகுதி நேர ஆசிரியர்கள் சொற்ப அளவே சம்பளம் வாங்கும் நிலை.இனி யாரிடம் சென்று முறையிடுவது? ஏற்றப்பட்ட 2500 ஓவாயும் இன்னும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சி நல்லது செய்யும் என்று நம்பிய எங்களை அதிமுக ஆட்சி மேல் என் சொல்ல வைக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்கிறார்கள். ஏமாற்றம். ஏமாற்றம். ஏமாற்றம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி