உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை (Tuition Fee) ரூ.50,000/- வரை உயர்வு - விண்ணப்பங்களை 31.01.2024க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: அரசாணை & படிவம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2023

உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை (Tuition Fee) ரூ.50,000/- வரை உயர்வு - விண்ணப்பங்களை 31.01.2024க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: அரசாணை & படிவம்!

அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற / பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு ( ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு மட்டும் ) இணைப்பு 1 இல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் , உயர் கல்வி பயில்வதற்கு கல்வி கட்டணத் தொகை ( Tutition fees ) தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயில கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் உயர்கல்வி கட்டணத் தொகை ( Tution Fees ) அல்லது ரூ .50.000 / - இதில் எது குறைவோ , அத்தொகை மற்றும் தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயில கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படும் கல்வி கட்டணத் தொகை ( Tution Fee ) அல்லது 15,000 / - இதில் எது குறைவோ அத்தொகை தேசிய ஆசிரியர் நல நிதியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்து உயர்கல்விக் கட்டணத் தொகையை வழங்கப்பட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.


எனவே , தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து , தொழில் நுட்பக் கல்வி , பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு 2023- 2024 ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ள பார்வையில் கண்ட அரசாணை நகல் மற்றும் ( திருத்திய ) படிவம் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத் தொகை (Tuition Fee) ரூ.50,000/- வரை உயர்வு - விண்ணப்பங்களை 31.01.2024க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: அரசாணை & படிவம்!👇

 DSE - Tr's Children Scholarship - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி