சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சியை, சேர்ந்த கூலி தொழிலாளியின், 10 வயது மகள், தலைவாசல் அரசு தொடக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த டிச., 22ல் வகுப்பறையில் இருந்தபோது, தலைமை ஆசிரியர் திருமுருகவேள், 57, பாடம் தொடர்பாக கேள்வி கேட்டு, அவர் வைத்திருந்த மூங்கில் குச்சியை துாக்கி வீசியதாக கூறப்படுகிறது. அப்போது, 10 வயது மாணவியின் இடது கண் மீது விழுந்தது. அதில் அவரது பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் அறிக்கை வழங்கினர்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார்படி, கடந்த, 24ல் தலைவாசல் போலீசார், திருமுருகவேள் மீது வன்கொடுமை உள்பட, 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். இந்நிலையில் சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ், நேற்று முன்தினம் திருமுருகவேளை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'மாணவியின் மருத்துவ அறிக்கை பெறப்பட்டு, அரசு சார்பில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக, கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு அறிக்கை வழங்கப்பட உள்ளது' என்றனர்.
அதேன்னடா எதுக்கு எடுத்தாலும் வன் கொடுமை தடுப்பு சட்டம் பாயுது.. தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேறு சட்ட பிரிவு இல்லையா??
ReplyDelete