லஞ்சம் கொடுத்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவு.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2024

லஞ்சம் கொடுத்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவு....

 

ஓசூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் முருகேஷ்  இவர் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் பெற்று வழங்கும் கோப்புகளை அடுத்த நிலைக்கு அனுப்ப தாமதித்தும் ஆசிரியர்களிடம் நஞ்சம் வாங்கியும் வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் புகார் செய்துள்ளனர்...

அதன் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நடத்திய விசாரணையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வேறு எழுத்துப்பூர்வமாக லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர் ஆசிரியர் கூறிய குற்றச்சாட்டுக்கு உண்மை என தெரிய வந்ததை அடுத்து உதவியாளர் முருகேசன் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்து விட்டார் இந்நிலையில் லஞ்சம் பெறுவது மற்றும் குற்றமுள்ள லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்ற அடிப்படையில் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்த ஆசிரியர்கள் நேற்று முன்தினம் 17 b ஒழுங்கு நடவடிக்கைக்கு நோட்டீஸ் வாங்கி ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ் அதனை நடவடிக்கை எடுத்துள்ளார்

இது ஆசிரியர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பை  பெற்றுள்ளது.


இந்த நோட்டீஸிற்கு அடுத்து 15 நாட்களுக்குள் ஆசிரியர் விளக்கம் அளிக்க வேண்டும் அவர்கள் மீது கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.1 comment:

  1. Newspaper image shows April 6. When it happened...? Else, Old news?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி