பல்வேறு மாநில அரசுகளும் நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளன.
மும்பை ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு நாளை மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது இந்த அறிவிப்பினை பின்பற்றி, பல்வேறு மாநில அரசுகளும் நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளன.
மராட்டிய மாநிலத்திலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது விடுமுறையை எதிர்த்து 4 சட்டக் கல்லூரி மாணவர்கள் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மாணவர்கள் அளித்துள்ள மனுவில்,
அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சி அதன் விருப்பத்திற்கு ஏற்ப பொது விடுமுறை அளிக்க முடியாது. மத நிகழ்ச்சியை கொண்டாட பொது விடுமுறை அறிவித்தது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாகும். ஒரு அரசு எந்த மதத்துடனும் தொடர்பு கொள்ளவோ அல்லது ஊக்குவிக்கவோ முடியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு குல்கர்னி, நீலா கோகாலே நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது
முன்னாள் முதல்வர்கள் ஆட்சியாளர்கள் மரணிக்கும் போது விடுமுறை அளிக்கப்படும் போது இவற்றிற்கு விடுமுறை அளிப்பது தவறு ஏதும் இல்லை சட்டம் இல்லை என்றால் அரசியல் கட்சித் தலைவர்கள் மரணிக்கும் போதும் விடுமுறை அளிக்க சட்டம் இல்லை. மக்கள் எதற்கு அநேக ஆதரவு தருகிறார்களோ அதுவே தான் ஜனநாயகம்
ReplyDeleteCPS slip மற்றும் missing credit details download செய்ய வழி முறை
ReplyDelete