குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு, உணவூட்டுச் செலவினம் உயர்வு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2024

குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு, உணவூட்டுச் செலவினம் உயர்வு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு, உணவூட்டுச் செலவினம் உயர்வு - ஆண்டுக்கு ₹4114 கோடி கூடுதல் செலவினம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!


தமிழ் நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் . குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவினத் தொகையினை உயர்த்தி வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் . அதன்படி , 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மைய சத்துணவுத் திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டுச் செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ .2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

 தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி , தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ரூ . 1.33 எனவும் . உப்பு உள்ளிட்ட தாளிதப் பொருட்களுக்கான செலவினம் ரூ . 0.46 எனவும் . எரிபொருளுக்கான செலவினம் ரூ .0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . உணவூட்டுச் செலவினம் தற்போது வழங்கப்பட்டு வருவது மற்றும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ள விவரங்கள் மேற்காணும் அட்டவணையில் கண்டுள்ளவாறு :


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி