அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - DEE & DSE Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2024

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - DEE & DSE Proceedings

பள்ளிக் கல்வி - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் -மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு

ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு , அம்மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும் , கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் புற கல்விச் செயல்பாடுகளில் அம்மாணவர்கள் சிறப்பான பங்களிப்பும் காரணமாக அமைகின்றன. கல்வியாண்டு முழுவதும் பள்ளியில் நிகழும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பினை , ஆண்டு இறுதியில் மாணவர்கள் அவர்கள் தம் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த நல்வாய்ப்பாக அமைவது பள்ளி ஆண்டு விழாவாகும். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். 


" அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை , இலக்கியம் , விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் . இதற்கென சுமார் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். "

 அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடைபெற வேண்டும். மாணவர்களின் தனித்திறன்களை அவர் தம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக வெளிப்படுத்த ஏதுவாக அரங்கம் அமைத்து, சிறந்த ஒளி , ஒலி அமைப்பினை ஏற்படுத்தி ஆண்டு விழாவினை கொண்டாடிட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


எனவே , மேற்குறிப்பிட்டுள்ளவாறு உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 10.02.2024 - க்குள் ஆண்டு விழாவினை நடத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) - ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

School Annual Day-2024- Proceedings - Download here

1 comment:

  1. சேலம் மாநாட்டுக்கு 7000கோடி செலவாம்..... உண்மையா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி