பள்ளி வானவில் மன்ற செயல்பாடுகளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல் SPD செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2024

பள்ளி வானவில் மன்ற செயல்பாடுகளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல் SPD செயல்முறைகள்

பள்ளி வானவில் மன்ற கருத்தாளர்கள் பருவம் -II, III செயல்பாடுகளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்தல்  SPD செயல்முறைகள்

மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக வானவில் மன்றமானது ( நடமாடும் அறிவியல் ஆய்வகம் ) நவம்பர் 28 , 2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 13210 அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . 710 வானவில் மன்ற கருத்தாளர்கள் தெரிவு செய்யப்பட்டு . பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் , பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித சோதனைகள் நடத்துவதற்காக அறிவியல் மற்றும் கணிதக் கருவிகளுடன் கட்டமைக்கப்பட்ட அட்டவணையின்படி பள்ளிகளுக்கு சென்று பயிற்சி அளிக்கின்றனர்.


 தற்போது 710 வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு பருவம் II மற்றும் II- க்கான அறிவியல் மற்றும் கணிதக் கருவிகள் இணைப்பு -1 ல் வழங்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ளவாறு கொள்முதல் செய்து வழங்கப்பட வேண்டும் . இதற்கான நிதி மாவட்ட வாரியாக இணைப்பு -2 ல் உள்ளவாறு விடுவிக்கப்படுகிறது . மேலும் பொருட்கள் கொள்முதல் செய்யும் போது Tamil Nadu Transparency in Tenders Act விதிமுறைகளை பின்பற்றவும் , எவ்வித புகாருக்கும் இடமளிக்காமலும் செலவினங்கள் மேற்கொள்ளவும் , செலவினங்கள் மேற்கொண்ட பின்னர் பயன்பாட்டு சான்றிதழ் வழங்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

 இணைப்பு : 1 மற்றும் II

Moblile Science Lab_Science kit - 2023-24- Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி