இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் - கட்டடங்கள் நிலையினை TNSED செயலியில் இணையவழி பதிவு செய்தல் - DSE & DEE இணைச் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 12, 2024

இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் - கட்டடங்கள் நிலையினை TNSED செயலியில் இணையவழி பதிவு செய்தல் - DSE & DEE இணைச் செயல்முறைகள்!

அரசு மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வி பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில் பள்ளிகளில் பழுதடைந்த இடிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள்.

 கழிவறைகள் மற்றும் இதர கட்டிட விவரங்கள் கண்டறியப்பட்டு TNSED Administration App- இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . மேலும் , தொடர்ச்சியாக பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் , இப்பணியின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளவும் , அதனடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் ஏதுவாக மேற்கண்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இடிக்கப்ட வேண்டிய கட்டிடங்களின் தற்போதைய நிலையினை பின்வரும் வழிமுறையினைப் பின்பற்றி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உரிய விவரங்களை செயலியில் பதிவேற்றம் செய்திட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


 To Be Demolished Buildings - Update In Tnsed App - Proceedings - Download here

1 comment:

  1. ஆசிரியர் தேர்வு வாரியக்கட்டிடத்தை முதலில் இடிக்கப்படவேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி