80 சி பிரிவில் 1.5 லட்சம் விலக்கு போக வருமான வரி தவிர்ப்பில் மிகவும் உதவும் இன்ன பிற வாய்ப்புகள் என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2024

80 சி பிரிவில் 1.5 லட்சம் விலக்கு போக வருமான வரி தவிர்ப்பில் மிகவும் உதவும் இன்ன பிற வாய்ப்புகள் என்ன?

 

80 CCD 1 மற்றும் 80 CCD 2 இல் தலா 50 ஆயிரம் வரை NPS எனப்படும் தேசிய பென்ஷன் ஸ்கீம் இல் வாய்ப்புகள் உண்டு . இதில் முதல் கூறியது நமது Employee வகையில் இரண்டாவது Employer வகையில் . இது தற்போது மத்திய அரசில் அல்லது மாநில அரசில் இருப்பவர்களுக்கு சம்பளத்தில் பிடித்துக்கொள்ளப்படுகிறது . பிற வேலைகளில் இருப்பவர்கள் தானே விருப்பப்பட்டால் தொடங்கலாம்.


இது தவிர 80 D யில் மருத்துவ காப்பீடுகளுக்கான தொகை யில் வாய்ப்புகள் உண்டு .

80 E கல்விக்கடன் வட்டிக்கு

80 G அரசிற்கோ அல்லது பொது நிவாரண நிதிக்கோ அல்லது அரசியல் கட்ச்சிக்கோ அல்லது IT சான்றிதழ் பெற்ற NGO எனப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு தரப்படும் நன்கொடை

மேலும் சில வகை யில் இந்த வருடம் வீட்டு கடன் 45 இலச்சம் வரை வங்கியில் கடன் பெற்றால் அதற்கு கட்டும் வட்டியில் இருந்து 3.5 இலட்சம் வரை விலக்கு உண்டு .

நான்கு சக்கர மின்சார ஊர்தி வாங்கினால் அதற்கு வாங்கும் கடனில் கட்டிய வட்டிக்கு 1.5 இலட்சம் வரை விலக்கு உண்டு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி