பழைய ஓய்வூதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2024

பழைய ஓய்வூதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா ?

'தமிழக பட்ஜெட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் செல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை:


கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல், 1 முதல், அப்போதைய அ.தி.மு.க., அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. 2004ல் மத்திய பா.ஜ., அரசும், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.


இத்திட்டத்தை ரத்து செய்வதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா கொடுந்தொற்றால் நிதிநிலை சரியில்லாமல் போனதால் தாமதமானது. தற்போது நிதி நிலைமை படிப்படியாக சீராகி வருகிறது.


ராஜஸ்தான், உத்தரகண்ட், கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே, மேற்கு வங்கம், கோவா மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் தொடர்கிறது.


அதேபோல், தமிழகத்திலும் நடப்பாண்டு பட்ஜெட்டில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 comments:

  1. சீனி சக்கர சித்தப்பா,, சீட்ல எழுதி நக்கப்பா 😄😄😄

    ReplyDelete
  2. வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல

    ReplyDelete
  3. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி