மிரட்டிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கலெக்டரிடம் பள்ளி மாணவி புகார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2024

மிரட்டிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கலெக்டரிடம் பள்ளி மாணவி புகார்

 போக்சோ புகார் அளிக்கவிடாமல் தடுத்து, மிரட்டிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பள்ளி மாணவி நேற்று கலெக்டர் அலுவலகத்தில், புகார் மனு அளித்தார்.


தொண்டாமுத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு பள்ளியின், உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார். இவர் மீது, மாணவி ஒருவர் அளித்த பாலியல் தொந்தரவு புகார் அடிப்படையில், போக்சோ வழக்கின் கீழ், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.போலீசாரிடம் புகார் அளிப்பதற்கு முன்பு, கடந்தாண்டு ஏப்ரல் மாதம், தலைமையாசிரியை ஜீவாஹட்சனிடம், பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோருடன் சென்று புகார் அளித்துள்ளார். 

அப்பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்களிடமும், உடற்கல்வி ஆசிரியர் குறித்து, புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இவர்கள் யாரும், உரிய உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கண்டிக்காமல், பாதிக்கப்பட்ட மாணவியை, புகார் அளிக்கவிடாமல் மிரட்டியதாகவும், திட்டியதாகவும், போலீசாரிடம் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.


இருப்பினும், மிரட்டிய 10 ஆசிரியர்கள் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தன்னை மிரட்டிய அனைத்து ஆசிரியர்கள் மீதும், நடவடிக்கை எடுக்குமாறு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மாணவி புகார் அளித்துள்ளார்.முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்டபோது, புகார் மனு பற்றி விசாரிக்கப்படும் என்றார்.

1 comment:

  1. பகடைக்காய் போல போக்சோ பயன்படுத்தப்படுவது வேதனையை ஏற்படுத்துகிறது. மன முதிர்ச்சி இல்லாவதவர்கள் கையில் கிடைக்கும் ஆயுதமும் அதிகாரமும் பேராபத்து.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி