வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2024

வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

கடந்த 01.04.2012 முதல் 08.06.2017 வரை நடைமுறையில் இருந்து வந்த வழிகாட்டி மதிப்புகள் கடந்த 09.06.2017 முதல் தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக 33 % குறைக்கப்பட்டது. வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருந்து வந்த காரணத்தினால் கடந்த 01.04.2023 அன்று வழிகாட்டி மதிப்பானது 08.06.2017 வரை பின்பற்றப்பட்டு வந்த அதே மதிப்பிற்கு மீள மாற்றப்பட்டது.


5 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த அதே வழிகாட்டி மதிப்பை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டதை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதாக வேண்டுமென்றே திரித்து தவறான தகவல் பரப்பப்பட்டது. 


மேலும் , இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் மேற்படி வழிகாட்டி மதிப்பு மாற்றம் குறித்த பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கையை இரத்து செய்து ஆணையிடப்பட்டது.


 மேற்படி உத்திரவினை எதிர்த்து தமிழக அரசால் மேல்முறையீடு செய்யப்பட்டது . மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்ற மேற்படி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் மேற்படி ஆணைக்கு 15.02.2024 அன்று இடைக்கால தடை உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி