இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 29, 2024

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - முடிவுக்கு கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு?

 

போராடும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நீக்கம், ஊதியம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடி முடிவு? - News 18 Tamil Video


சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றக்கோரி 2009க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர் தற்போது இன்று முதல் சென்னையிலும் பிற மாவட்ட தலைநகரங்களிலும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பள்ளி கல்வித்துறை அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனல் செய்திகளை வெளியிட்டுள்ளது


அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யவும் மேலும் தொடர் நடவடிக்கைகளை எடுக்கவும் பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


இதன் பிறகும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்மையானால் பணி நீக்கம் செய்யவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்ய உள்ளதாக அந்த செய்தி சேனலில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.


அந்தச் செய்தி சேனலின் ஆசிரியர்கள் போராட்டம் பள்ளிக்கல்வித்துறை முடிவு குறித்த முழு வீடியோ கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது👇

Click Here - இடைநிலை ஆசிரியர்கள் பணி நீக்கம் -   News 18 Tamil Full Video

5 comments:

  1. திமுக கரையவும் கலையவும் போகிறது. இந்த உண்மை தெரியாமல் ஆடுகிறது

    ReplyDelete
  2. பிரச்சனையை தீர்க பார்க்கவும் நெருப்பின் மீது விளையாடிதீர்

    ReplyDelete
  3. ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிக்க போகின்றன ர்.... அனைத்து சட்டமன்றங்கள் கலைய போகிறது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி