பொதுத் தேர்வுப் பணி கண்காணிப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சிக்கு மாற்றம் - DGE செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2024

பொதுத் தேர்வுப் பணி கண்காணிப்பு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சிக்கு மாற்றம் - DGE செயல்முறைகள்!


பள்ளிக்கல்வித்துறைச் சார்ந்த அலுவலர்களை மார்ச் / ஏப்ரல் 2024 -ல் நடைபெறவுள்ள இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களுக்கும் கண்காணிக்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

 பார்வை - 2 - இல் காணும் அரசுத்தேர்வுகள் இயக்கக இயக்குநர் அவர்களின் நேர்முகக்கடிதத்தில் 06.02.2024 அன்று சென்னையில் நடைபெறவுள்ள ஆய்வு அலுவலர்களுக்கான கூட்டத்தில் கலந்துக் கொள்ளக்கேட்டுக்கொள்ளப்பட்டது . தற்சமயம் இக்கூட்டம் அதே நாளில் ( 06.02.2024 ) திருச்சி மாவட்டம் , சமயபுரம் , தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ளது.

 இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் பொதுத்தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படவுள்ளதால் அனைத்து கண்காணிக்கும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் தவறாது கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு : அரசாணை ( வாலாயம் ) எண் : 77 ,

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி