அரசாணை 243 தொடர்பாக விரைவில் முடிவெடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை முதலன்மைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் எனவும், இது இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளதாகவும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசாணை 243-ஐ ரத்து செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், சம்பந்தபட்ட அரசாணையை நீக்குவதா? அல்லது மாற்றங்களை செய்வதா? என்பது குறித்து விரைவில் முடிவெடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை முதலன்மைச் செயலாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகி வின்செண்ட் பால்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்கள் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்ற உணர்வை முதன்மைச் செயலாளர் ஏற்படுத்தியுள்ளார். அரசாணை 243-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை முதன்மைச் செயலாளரிடம் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
பார்ப்போம் என்ன நடக்குது என்று
ReplyDeleteNadakum yapamunu theriyathu
ReplyDelete