போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி 22 ஆண்டுகள் அரசு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை போலீசார் கைது செய்து விசாரணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2024

போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி 22 ஆண்டுகள் அரசு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை போலீசார் கைது செய்து விசாரணை

திருச்சி மாவட்டம், முசிறியில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். 


முசிறி சிங்காரசோலையைச் சோ்ந்த காளிமுத்து மனைவி அறச்செல்வி( 57) என்பவா் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து 2001 முதல் 2023 வரை ஆசிரியை பணியாற்றியதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாருக்கு புகாா் வந்தது. இதையடுத்து அறச்செல்வியின் 12- ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியா் பட்டயப்படிப்பு சான்றிதழ்களை ஆய்வுகாக அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் மற்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தாா். அதில், அறச்செல்வி மேல்நிலைத் தோ்வில் ஆறு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளதாகவும், அதற்காக போலியான மதிப்பெண் சான்றிதழ் தயாா் செய்து, அதனை பயன்படுத்தி, ஆசிரியா் பட்டய படிப்பு முடித்துள்ளாா். மேலும், 2001 முதல் முசிறி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து கடந்த 19.10. 2023 அன்று விருப்ப ஓய்வு பெற்றாா். 


இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் கொடுத்த புகாரின் பேரில் முசிறி காவல் ஆய்வாளா் கதிரேசன் வழக்குப் பதிந்து அறச்செல்வியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.



2 comments:

  1. 22 வருடங்கள் ராஜ வாழ்க்கை வாழ்ந்து இருப்பாளே .....

    ReplyDelete
  2. அரசு அதிகாரிகள் 22வருடங்கள் தூங்கி விழித்திருக்கிரார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி