32 அரசு பள்ளிகளை மூட முடிவு பூட்டு லிஸ்டில் முதல் மாவட்டம் கள்ளக்குறிச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2024

32 அரசு பள்ளிகளை மூட முடிவு பூட்டு லிஸ்டில் முதல் மாவட்டம் கள்ளக்குறிச்சி

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், மார்ச் 1 முதல், மாணவர் சேர்க்கை பணி துவங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, குறைந்தபட்ச அளவை விட குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உடைய பள்ளிகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது, கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, தலா, 30 மாணவர்; ஆறு முதல் எட்டு வரை தலா, 35; ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு தலா, 40 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தலா, 50 மாணவர்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும்.

இதன்படி, தமிழகம் முழுதும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள பள்ளிகளை மூட, தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 31 தொடக்கப் பள்ளிகளும், ஒரு நடுநிலைப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை அருகில் உள்ள பிற அரசு பள்ளிகளில் சேர்க்க, கல்வித்துறை இயக்குனர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த பட்டியலில், உளுந்துார் பேட்டை ஒன்றியத்தில் உள்ள எலவனாசூர் ஊராட்சி பள்ளியில், மொத்தம் உள்ள ஐந்து வகுப்புகளில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் ஒரே ஒரு மாணவி படிப்பது தெரியவந்துள்ளது.

அதே ஊரில் உள்ள இன்னொரு பள்ளியில், 1,3,4,5 வகுப்புகளில், தலா ஒரு மாணவர் படிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ரிஷிவந்தியம் ரெட்டியார் பாளையம் ஊராட்சி பள்ளியில், மூன்று பேர் மட்டும் படிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளின் மாணவ - மாணவியரை, அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 13 ஆசிரியர்கள், 23 தலைமை ஆசிரியர்கள், மாணவர் விகிதத்தை விட உபரியாக உள்ளனர். அவர்களையும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.2 comments:

 1. காலி பணியிடங்களை நிரப்பக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்
  மார்ச்.19 - 2024

  தமிழகம் முழுவதும்   இந்த வருடம் 2024-25 நிலவரப்படி 25
  ஆயிரத்து 33 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளநிலையில் வெறும் 2222 ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே நியமன தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான எந்த ஒரு தேர்வும் நடத்தப்படாத நிலையில் தற்போது நடைபெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன தேர்வில் காலி பணியிடங்கள் மிக குறைவான அளவிலேயே உள்ளதால் அதை அதிகரிக்க வலியுறுத்தி தமிழக முழுவதும் இருந்து நியமன தேர்வில் வெற்றிபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை
  மனு பெட்டியில் போட்டு சென்றனர்.

  மேலும்,இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவ லின்படி, தமிழ் பாடத்தில்  1447, ஆங்கிலம் பாடத்துக்கு 753, கணித பாடத்தில் 577, அறிவியல் பாடத்தில் 1680, சமூக அறிவியல் பாடத்துக்கு 1163 என மொத்தம் 5620 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எனவே, தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக உயர்த்தி படித்த பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண் டும்", என்றனர்.

  🔥நீங்கள் கணித ஆசிரியரா ? TET தேர்வில் தேர்ச்சி பெற்றவரா ? நியமன தேர்விற்கு தயாராகுபவரா ? இங்கு தரமான Poll Maths  வினா விடைகள் உள்ளது. ஜாயின் செய்து தேர்வில் வெற்றி பெறுங்கள்.

  https://t.me/+-YtS1k7h_rQ2MmM1

  ReplyDelete
  Replies
  1. Intha material sale panna thaan ivlo build-up panniyaaaaa.....

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி