வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 2024 ஆம் ஆண்டு 01.01.2024 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) தயார் செய்தல் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2011 & முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2023 க்குள் முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...
DEE Proceedings - Download here

தமிழக கல்வி துறையில் அவலம்:
ReplyDeleteதொடக்க பள்ளிகள் :
பணக்கார குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர். ஏழை மாணவர்கள் படிக்கும் ஈராசிரிய தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர். ஒரு ஆசிரியர் விடுமுறை எடுத்து விட்டால் ஒன்று முதல் 5 வகுப்பு வரை ஒரே ஆசிரியர். கல்வித்தரம் எப்படி இருக்கும்.
நடுநிலை பள்ளிகள்:
வசதியானவர் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர். ஆனால் ஏழை மாணவர்கள் படிக்கும் நடுநிலை பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர் கணக்கு பாடம் கற்பிக்கும் நிலை.
அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயர்த்த நமது அரசு முயல வேண்டும். தொடக்க கல்வி என்பது அடிப்படை , இதிலிருந்து நமது சமூக நீதியை முதல்வர் அவர்கள் நிலை நாட்ட வேண்டும்
ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஜாக்டா ஜியோ:
உங்கள் சம்பளத்திற்கு போராடும் நீங்கள் உங்கள் குழந்தைகளை இது போன்ற பள்ளிகளில் படிக்க வைப்பீர்களா? இந்த சமூக நீதிக்கும் சேர்த்து போராடுங்கள்.