வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபாவை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2024

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபாவை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபாவை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்ததால் கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்தாலோ, முறைகேடுகளுக்கு உடந்தை போனாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2 comments:

  1. ஓரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் பணி இடம் உருவாக்குங்கள். ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர் பாடம் நடத்துவது , ஏழை மாணவர்களை வைத்து காமெடி செய்வது போல உள்ளது. எந்த கல்வி அதிகாரி ஆவது உங்கள் குழந்தைகளை இது போன்ற பள்ளிகளில் படிக்க வைப்பீர்களா? பேச்சில் மட்டும் சமூக நீதியா?

    ReplyDelete
  2. தமிழக கல்வி துறையில் அவலம்:
    தொடக்க பள்ளிகள் :

    பணக்கார குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர். ஏழை மாணவர்கள் படிக்கும் ஈராசிரிய தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர். ஒரு ஆசிரியர் விடுமுறை எடுத்து விட்டால் ஒன்று முதல் 5 வகுப்பு வரை ஒரே ஆசிரியர். கல்வித்தரம் எப்படி இருக்கும்.

    நடுநிலை பள்ளிகள்:

    வசதியானவர் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர். ஆனால் ஏழை மாணவர்கள் படிக்கும் நடுநிலை பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர் கணக்கு பாடம் கற்பிக்கும் நிலை.
    அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயர்த்த நமது அரசு முயல வேண்டும். தொடக்க கல்வி என்பது அடிப்படை , இதிலிருந்து நமது சமூக நீதியை முதல்வர் அவர்கள் நிலை நாட்ட வேண்டும்

    ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஜாக்டா ஜியோ:

    உங்கள் சம்பளத்திற்கு போராடும் நீங்கள் உங்கள் குழந்தைகளை இது போன்ற பள்ளிகளில் படிக்க வைப்பீர்களா? இந்த சமூக நீதிக்கும் சேர்த்து போராடுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி