வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை தற்போது வரை எவ்வளவு? தமிழக அரசு தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2024

வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை தற்போது வரை எவ்வளவு? தமிழக அரசு தகவல்

 

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


கடந்த பிப்.29-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- தமிழ்நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 54,81,564 ஆகும். அதில், ஆண்கள் 25,26,487 பேரும், பெண்கள் 29,54,,792 பேரும் உள்ளனா்.


மூன்றாம் பாலினத்தவா் 285. இந்த எண்ணிக்கையில், வயது வாரியாக பதிவுதாரா்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் 11,495 பேரும், 19 முதல் 30 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 24,12,771 பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 17,21,980 பேரும் உள்ளனா். 46 வயது முதல் 60 வயது வரையுள்ள முதிா்வு பெற்ற பதிவுதாரா்களின் எண்ணிக்கை 2,39,391 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வை மாணவா்கள் முடித்து தங்களது கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும்போது, இப்போதிருக்கும் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.

1 comment:

  1. திமுக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கும் என்று நினைத்து வாக்களித்தோம். அதையும் ஏமாற்றி விட்டது. பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் டெட் தேர்ச்சி பெற்ற என அனைவரையும் ஏமாற்றி விட்டது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி