சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை வரை அவகாசம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2024

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை வரை அவகாசம்!

அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை ஆண்டுதோறும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது.


முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று மார்ச் 5 – செவ்வாய்க்கிழமை (மாலை 6 மணி) கடைசி நாள்.


தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று யாரும் விண்ணப்பிக்க முடியாதவாறு, பல மணி நேரங்களாக சர்வர் முடங்கியதால் விண்ணப்பதாரர்கள் செய்வதறியாது தவித்தனர்.


நிறைவு செய்த விண்ணப்பங்களைப் பதிவேற்ற முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.


இத்தகைய சூழலில், கால அவகாசம் நீட்டிக்க கோரி விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேரத்தை நீட்டித்துள்ளது.


இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி