இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2024

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் - 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் . 01/2024 , நாள்o9.02.2024 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . இந்நிலையில் , விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர் . அதனடிப்படையில் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024 - லிருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும் , விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் , இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள விரும்பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


மேலும் , விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் ( Edit Option ) மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.

TRB Press News 13.03.2024 - Download here

3 comments:

 1. *#WeNeedMoreBTtrb2024Vacancy*

  அய்யா வணக்கம்..!
  நான் கடந்த 04/02/2024 அன்று நடந்த பட்டதாரி ஆசிரியர் நியமனத் தேர்வு எழுதி உள்ளேன். கடந்த *2013* ஆம் ஆண்டில் இருந்து தற்போது *2024* ஆம் ஆண்டு வரை *பத்து ஆண்டுகளாக எந்த ஒரு ஆசிரியர் பணியிடமும் நிரப்ப பட வில்லை.* *தமிழ்நாடு அரசு ஆசிரியர் நியமனத்துக்கு என தேர்வை* நடத்தி, நல்ல ஒரு முடிவை எடுத்தது மிகவும் மகிழ்வாக உள்ளது. எனினும் *அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் மிக மிக குறைவு. 2,222 காலிபணியிடங்கள் என்பது 10 ஆண்டுகளாக காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது..* 1.ஆசிரியர் தகுதித்தேர்வு
  2.தமிழ் தகுதித்தேர்வு
  3.நியமனத் தேர்வு என *மூன்று தேர்வுகள்* எழுதி ஆசிரிய பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. குறைந்தபட்சம் *தற்போது பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 10,000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்பட வேண்டும்.* எங்கள் வாழ்வில் *தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும்* என தேர்வை எழுதி காத்திருக்கும் 40,000 ஆசிரியர்கள் சார்பாக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்..!
  நன்றி ..!அய்யா...!

  ReplyDelete
 2. கணினி ஆசிரியர்களுக்கான அறிவிப்புகள் அறிவிப்பு எப்போது?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி