போராடும் ஆசிரியர்களுக்கு மெமோ - 'சஸ்பெண்ட்' செய்ய வாய்ப்பு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2024

போராடும் ஆசிரியர்களுக்கு மெமோ - 'சஸ்பெண்ட்' செய்ய வாய்ப்பு?

 

அரசின் வேண்டுகோளை புறக்கணித்து, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


அரசு பள்ளிகளில், 2009 ஜூன் 1க்கு முன் நியமிக்கப்பட்டவர்களை போன்றே, அதற்குப்பின் நியமிக்கப்பட்ட தங்களுக்கும், அடிப்படை ஊதியம் வேண்டும் என, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சங்கமான, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இந்த சங்கம் சார்பில், கடந்த மாதம் 19ம் தேதி முதல், சென்னை உட்பட மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படுகிறது.


தேர்வு நடைபெறும் காலம் என்பதால், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்லுமாறு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.


ஆனால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.


மேலும், பெற்றோரையும் போராட்டத்துக்கு வரவழைத்து, ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளது.


இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்கள் மற்றும் பெற்றோரை, உள்நோக்கத்துடன் தங்கள் சுயலாபத்துக்கு திரட்டுவது, ஆசிரியர்களின் நியமன விதிகளுக்கு எதிரானது.


இதன்அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.


'ஆசிரியர்களின் விளக்கம் திருப்தி அளிக்காவிட்டால், நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, 'சஸ்பெண்ட்' செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு பாதிக்கும் அபாயம் உள்ளது' என்றனர்.

7 comments:

 1. பாராளுமன்ற தேர்தல் அருகில் உள்ளது பார்த்து செய்யவும்

  ReplyDelete
 2. இன்னைக்கு சம வேலைக்கு சம ஊதியம் கொடுத்தால் நாளை சம வேலைக்கு சம பென்சன் கொடுக்கனும் ஆக எல்லோருக்கும் ஒரே ...

  ReplyDelete
  Replies
  1. ஆட்டுக்கு ஒரு ஓநாய்....

   Delete
 3. எல்லோரையும் டிஸ்மிஸ் செய்யுங்க. டெட் தேர்ச்சி பெற்று நாங்கள் காத்து கொண்டு உள்ளோம். எங்களுக்கு மாதம் 25000 தந்தால் போதும்.

  ReplyDelete
  Replies
  1. Thambi neenga govt. Jobkulla vantha ithathaan thambi keepinga.

   Delete
 4. அருமை.. அப்படியானால் உங்கள் வேலையும் அந்த அளவுக்கு தான் இருக்கும் போலவே.. அதான் 25000 போதும்னு சொல்றிங்க...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி