SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தயார் - பதிவிறக்கம் செய்வது எப்போது? எவ்வாறு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2024

SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தயார் - பதிவிறக்கம் செய்வது எப்போது? எவ்வாறு?

SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 20.03.2024 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

 மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 15.03.2024 முதலும் , தேர்வு மையப் படிவங்களை ( Centrewise Nominal Roll , Seating Plan , CSD Forms ш Coverwise Script Detail ) 18.03.2024 பதிவிறக்கம் செய்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது . தற்போது அத்தேதிகளுக்கு மாற்றாக 20.03.2024 முற்பகல் முதல் தேர்வுகூட நுழைவுச்சீட்டினை அனைத்து பள்ளிகளும் மற்றும் 20.03.2024 பிற்பகல் முதல் தேர்வு மைய படிவங்களை தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தங்களது User ID . Password- ஐ பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

1 comment:

  1. திமுக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கும் என்று நினைத்து வாக்களித்தோம். அதையும் ஏமாற்றி விட்டது. பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் டெட் தேர்ச்சி பெற்ற என அனைவரையும் ஏமாற்றி விட்டது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி