அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கும் 2-ஆம் கட்ட பள்ளி மானியத் தொகை விடுவிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2024

அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கும் 2-ஆம் கட்ட பள்ளி மானியத் தொகை விடுவிப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2023 -24 ஆம் நிதியாண்டு அனைத்து வகை அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை ( Composit School Grant /Sim for Tablet -june -24) இரண்டாம் கட்டமாக மீதம் உள்ள 50% மானியத்தொகை அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


மத்திய கல்வி அமைச்சகத்தின் , திட்ட ஒப்புதல் குழு 2023-24ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக UDISE 2021-22ன்படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது.


 பார்வை 3 ல் காணும் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி 50 சதவீதம் பள்ளி மானியம் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக விடுவிக்கப் பட்டுள்ளது . தற்போது பார்வை 4 ல் காணும் சென்னை -6 , மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி மீதமுள்ள 50 சதவீத பள்ளி மானிய தொகையினை அனைத்து அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் ரூ 632072500 ( ரூபாய் அறுபத்து மூன்று கோடியே இருபது இலட்சத்து எழுபத்திரண்டாயிரத்து ஐநூறு மட்டும் ) பள்ளிக் கல்வி இயக்குநருக்கு விடுவிக்கப்பட்டு , மானியத் தொகை பள்ளிக் கல்வி இயக்குநரின் வங்கி கணக்கிற்கு பெறப்பட்டுள்ளது . எனவே பார்வை 4 ல் காணும் மேற்காண் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகளின்படி மீதமுள்ள 50 சதவீதம் பள்ளி மானிய தொகையினை இணைப்பில் கண்டவாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் ( Fund Transfer ) செய்திட பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக அலுவலருக்கு ஆணை வழங்கப்படுகிறது.


இந்நிதியினை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள Tablet- க்கு தேவையான SIM- ற்கான ஜுன்'24 மாதத்திற்கான தொகையினை மட்டும் ( Rs.110 / -per Teacher ) பள்ளி மானியத்திலிருந்து மேற்கொள்ளவும் , பள்ளி மானியத் தொகையினை பார்வை 3 ல் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகள் மற்றும் மேற்கூறிய முன்னுரிமை தவிர வேறு எந்த செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தாமல் உரிய காலத்திற்குள் நிதியினை பயன்படுத்த அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பு : பணப்பரிமாற்ற வங்கி எண் விவரப் பட்டியல்

👇👇👇👇👇

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி