“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2024

“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி


“இண்டியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்” என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குற்தி அளித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்துக்குக் கொண்டு வந்தது; அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது; அதிமுக ஆட்சியில் முடக்கி விட்டுப் போன அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒரே நேரத்தில் 14 விழுக்காடு வழங்கியது என திமுகவின் சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்!.

கடந்த அதிமுக ஆட்சியில் கஜானாவைத் தூர்வாரி மாநிலத்தைக் கடும் நிதி நெருக்கடியில் விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் சூழலிலும் இன்றைக்கு மத்திய அரசுக்கு இணையான, மத்திய அரசு உயர்த்துகிற அகவிலைபடி உயர்வை அப்படியே வழங்கி வருகிறது திமுக அரசு. அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த மூன்று லட்ச ரூபாய் குடும்பநல நிதியை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடியபோது, போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளான வழக்குகள், துறைரீதியான நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் ரத்து செய்து, போராடிய காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஊதியத்தை வழங்கி இருக்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையான, தொடக்கக் கல்வித் துறையைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தொடக்கக் கல்வித் துறையைப் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பிரித்துத் தனியாகச் செயல்பட ஆணை பிறப்பித்து இருக்கிறோம்.

பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பணியிடத்தை மாற்றி இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று பல ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வந்து வந்திருக்கிறோம்.

ஒளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வு; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கைக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தியது, ஆசிரியர்களின் குழந்தைகளின் உயர் கல்விக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்த நிதியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது, கனவு ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்தது, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குவது திராவிட மாடல் அரசு.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்வது, 2800 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்தது, பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குக் கடுமையான நிதிநிலை நெருக்கடியையும் கடந்து 2500 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கியது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகப் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ரூபாய் 5000 தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கியது என அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ள அரசுதான் திராவிட மாடல் அரசு.

ஆனால், இப்போது திடீரென்று அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வந்துள்ளது போல் தேர்தலுக்காக நாடகமாடும் பழனிசாமியின் வரலாறும், அதிமுகவின் வரலாறும் எப்படிப்பட்டது? ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பற்றியெல்லாம் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து, அசிங்கப்படுத்தி, எள்ளி நகையாடி, அவர்களை கோரிக்கைகளுக்காக அழைத்துக் கூடப் பேசாமல் புறக்கணித்து அவமதித்தவர்தான் பழனிசாமி. இப்படிப்பட்டவருக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதியத்தை முதலமைச்சராக இருந்துகொண்டே மிக மோசமாகக் கிண்டலடித்து மேடையில் பேசி, அவர்களை மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டு, இப்போது கபட நாடகமாடி ஏமாற்றத் துடியாய் துடிப்பது யார்? பழனிசாமிதான்!

அதிமுக என்றைக்காவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் துணையாக நின்றுள்ளதா? அதிமுகவால் அரசு ஊழியர்கள் அனுபவித்த வேதனைகளும், துன்பங்களும் வரலாறு முழுக்க நிறைந்திருக்கிறதே!. அரசு ஊழியர்களுக்குத் திமுக ஆட்சி, பொற்கால ஆட்சி என்றால், அவர்களது வேதனையில் உள்ளம் மகிழும் இருண்ட ஆட்சியை நடத்தியது அதிமுக. எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டங்களை கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்ததும், அடக்குமுறை செய்ததும்தானே அதிமுக ஆட்சியின் அலங்கோலம். அந்த எஸ்மா, டெஸ்மா வழக்குகளை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான் என்பது வரலாறு!

இந்தியாவிலேயே முதன்முதலாகப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது அதிமுக ஆட்சி. இப்படிப்பட்ட அரசு ஊழியர் விரோத ஆட்சி நடத்திவிட்டு உத்தமபுத்திரன் போல் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது? ஆட்சியில் இருந்தபோது பழனிசாமிதானே அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை முடக்கி வைத்து விட்டுப் போனார். ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய முறையை ரத்து செய்து விட்டுப் போனார்? இன்று அவர் வடிக்கும் நீலிக்கண்ணீருக்குப் பின்னால் அதிகாரப் பசியும், துரோகத்தின் ருசியும்தான் இருக்கிறதே தவிரே; அரசு ஊழியர்களின் மீதான அக்கறை எள்முனையளவும் இல்லை.

பழனிசாமியும் அவரது கட்சியும், தமிழ்நாட்டை வஞ்சித்து, கஜானாவைத் தூர்வாரிவிட்டு சென்றபோதும், தமிழ்நாட்டை மீட்டெடுத்து, நிதி நிலைமையைச் சீர்செய்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அப்படிச் செய்யப்பட்ட திட்டங்களைத்தான் பட்டியலிட்டேன்.

மீதியுள்ள கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒவ்வொரு முறையும் அமைச்சர்கள் அழைத்துப் பேசுவதும், ஏன், நானே அழைத்துப் பேசி தீர்வு காண்பதும், தீர்வு காணப்படும் என உறுதியளிப்பதும் என அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதனால்தான், இன்றைக்கு
திராவிட முன்னேற்றக் கழக அரசு, அரசு ஊழியர்களின் நண்பனாகத் திகழ்கிறது
. தங்கள் கோரிக்கைகளை அரசு ஊழியர்களால் எளிதில் எங்களிடம் வந்து சொல்ல முடிகிறது. அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம்தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை.

அந்தத் தாமதம் கூட பழனிசாமி உருவாக்கிவிட்டுச் சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதுதான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கிச் சொல்லும் ஒரே அரசு திமுக அரசுதான். “உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் அச்சுப்பிசகாமல் நிறைவேற்றி தருவேன்” என்ற உறுதியை அவர்களை நேரில் அழைத்துப் பேசிச் சொல்லியிருக்கிறேன். இதெல்லாம் திமுக ஆட்சியில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது பொது வாழ்க்கை நடவடிக்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட பழனிசாமிக்குத் தெரிய வாய்ப்பில்லை.

எனவே, திமுகவின் சாதனைகளை மறைக்க அவர் போடும் வேடம், பகல் வேடமாகவே கலைந்து போகும் என்பது மட்டும் நிச்சயம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்… நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன், தமிழகத்தின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.

எனவே, “
திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கை
யை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும்” என்பதை உணர்ந்துள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறி ஆதரவு கோரியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

31 comments:

  1. மத்திய அரசு 2021 ஜூலை மாதம் வழங்கிய அகவிலைப்படி உயர்வை 2022 ஜனவரி மாதம் வழங்கியது.

    மத்திய அரசு 2022 ஜனவரி மாதம் வழங்கிய அகவிலைப்படி உயர்வை 2022 ஜூலை மாதம் வழங்கியது.

    மத்திய அரசு 2022 ஜூலை மாதம் வழங்கிய அகவிலைப்படி உயர்வை 2023 ஜனவரி மாதம் வழங்கியது.

    மத்திய அரசு 2023 ஜனவரி மாதம் வழங்கிய அகவிலைப்படி உயர்வை 2023 ஏப்ரல் மாதம் வழங்கியது.

    இந்த சாதனைகளை ஏன் மறந்துவிட்டீர்கள்?

    ReplyDelete
  2. ஊக்க ஊதிய உயர்வை ஆட்சிக்கு வந்த உடன் வழங்குவேன் என்று உறுதி அளித்து, பின்னர் ஏமாற்றியது.

    Lumsum amount தான் கொடுப்பேன் என்று கூறியது..

    இதையும் உங்கள் சாதனையாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. 2021ல் ஆட்சிக்கு வந்து 2024ல் இன்று வரை SURRENDER LEAVE SALARY கொடுக்காமல் இருப்பதுவும் உங்கள் சாதனை தானே!!!

    ReplyDelete
  4. 2021 தேர்தல் அறிக்கையில் எடப்பாடியார் அரசு ஊழியர்கள் என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக்கொண்டார். ஆனால் இன்று அவர் போடும் நாடகம் எங்களுக்கு புரியாமல் இல்லை.

    அதே நேரத்தில் அரசு ஊழியர்கள் ஓட்டை பெற்றுக்கொண்டு ஆட்சிக்கு வந்து நீங்கள் செய்த துரோகங்களை எங்களால் மறக்க முடியவில்லை.

    எடப்பாடியார் எதிரி என்றால் நீங்கள் துரோகி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சுயநலத்திற்காக ஓட்டு போட்டீர்கள். நீங்கள் தான் இந்த நாட்டுக்கு சாப கேடு.

      Delete
    2. மன்னிக்கவும். இப்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கைகள் நோட்டாவை நோக்கி போவது உறுதி. இனிமேலாவது நாடு நல்லா இருக்கட்டும். நாங்கள் தான் சாபக்கேடு என்றால் சாபம் இனிமேலாவது நீங்கட்டும்.

      Delete
    3. நோட்டா ஓட்டு ஒரு முக்கிய கட்சி மட்டுமே ஆதாயம் பெரும். மீண்டும் சாபக்கேடு தொடரும். நல்ல மனிதர்களுக்கு வாக்கு அளிக்கவும்.

      Delete
  5. உங்கள் அறிக்கையை பார்க்கும்போது டிக்கிலோனா பட காமெடி தான் நினைவிற்கு வருகிறது.

    "இன்னும் நீ என்ன பைத்தியகாரனாவே நெனெச்சுட்டு இருக்கேல"

    ReplyDelete
  6. போடாங்....... .......
    ..........

    ReplyDelete
  7. வாவ் அருமையான மாடல். என் ஓட்டு அவங்களுக்கு தான்? நாமெல்லாம் வீட்டில் பூச்சி தானே நெருப்பு என்றாலும் வெளிச்சம் என்றாலும் ஒன்றாக தான் தெரியும். மீண்டும் நாம் யாருக்கு ஒட்டு என்று உரக்கச் சொல்லுங்கள் சொல்லிக்கொண்டே இருங்கள் பைத்தியக்காரன் ஆகின்ற வரை.

    ReplyDelete
  8. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று ஏமாற்றியது

    ReplyDelete
  9. நன்றி மறந்த ஆட்சி

    ReplyDelete
  10. நான் தி மு க வின் அடிமை. சம்பளத்தை குறைத்தாலும் என் வாக்கு என்றும் தி.மு.கவிற்கே

    ReplyDelete
  11. தலைவா நீ வாழ்க. உன் குடும்பம் வாழ்க. இன்பநிதியை முதல்வராக்கும் வரை நாம் ஓயக்கூடாது

    ReplyDelete
  12. தலைவா உங்கள் மேல் நம்பிக்கை உள்ளது. இனி என்றும் நம் ஆட்சிதான்

    ReplyDelete
  13. தலைவா நீங்கள் தான் உண்மையான தொண்டன். வெற்றி பெற்று வரை ஓயாமல் உழைக்கவும். நாம் நல்லா இருக்கவில்லை என்றாலும் பிறர் நல்லா இருக்க வேண்டும் என்ற உங்கள் மனதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

    ReplyDelete
  14. பகுதி நேர ஆசிரியர்கள் ஆசிரியர்களை "பணிநிரந்தரம்"செய்யுங்கள்.2000,2000 ஏதினா மட்டும் எல்லா குறையும் தீர்ந்து விடுமா.உலகமே வாழுதுல அப்ப நாங்க மட்டும் என்ன????

    ReplyDelete
  15. Fraud, dishonest,(M.k.stalin).DMK cheaper close . Stalin remove your toopa

    ReplyDelete
  16. Old pension? Special teacher regulations? DA arrear? surrounder?,urimai thogai?300000appoint?

    ReplyDelete
  17. Dont worry about old pension. definitely our CM will give it

    ReplyDelete
  18. please wait our CM will give it.

    ReplyDelete
  19. Government servants dont have dont have anyother choice other than DMK. Vote for DMK and definitely Stalin ayya will give for us. We cannot vote for AIADMK or anyother party. Voting for nota is waste. So as usual more than 90% of votes should be for DMK

    ReplyDelete
  20. Special teachers pstm posting ennachu

    ReplyDelete
  21. Stalin cheating man,this election is final.what about Stalin promise?

    ReplyDelete
  22. No brother. due to bjp only the EL surrender amount has not provided. there is a proposal for the surrender. Actually CM assured that EL surrender to be announced before election. so that the strike has been called off. This is not fault of our CM. CM definitely will provide all benefits. DMK is only our solution. Believe my words

    ReplyDelete
    Replies
    1. He will give surrender before 2026 election to get govt staff 's notes. Athuvum antha one year surrender matum than kodupanga. Intha election la DMK lose panathan next year ethavathu payathula pannuvanga. Ilana epaium pola namam than

      Delete
  23. இன்னும் எத்தனை நாள் வாயில வடை சுட போறீங்க சிஎம் சார்

    ReplyDelete
  24. ஓட்டு போட்டு மீண்டும் ஜெயிக்க வச்சா எங்களை கேனப்பையன்னு நினைத்துவிடுவீர்கள். தோற்கடித்தால் இனிமேல் நாம் பொய்யான வாக்குறுதி கொடுக்கக் கூடாதுன்னு தோணுமில்ல. நம்ப வச்சு கழுத்தறுத்திட்டிங்க சார் நீங்க. நிதி நிலைமையை சரி செய்ய முடியாத உங்களுக்கு ஏன் சார் ஆட்சி?

    பாஜக கொண்டு வந்தது தானே புதிய ஓய்வூதிய திட்டம் அதை ஏத்துப்பீங்க,
    ஊக்க ஊதியம் மோடி கொண்டு அந்த திட்டத்தை அப்படியே நடைமுறை படுத்துறீங்க,
    அதுல எல்லாம் மோடி எதிர்க்க மாட்டீங்க?
    ஒன்னா நம்பர் துரோகி சார் நீங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் நிறைய அரசு ஊழியர்கள் இன்னும் இந்த அரசுக்கு தான் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் நோக்கம் பிஜேபி வர கூடாதுனு இந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வரும் தேர்தலில் இந்த அரசு தோற்றால் தான் இனி வரும் காலங்களில் எதாவது செய்வார்கள்

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி