தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால் அடுத்த மாதமே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடும்: ராமதாஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2024

தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால் அடுத்த மாதமே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடும்: ராமதாஸ்

 

இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால், அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது உள்ளிட்ட அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஏமாற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது.


2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததற்கு அரசின் நிதி நெருக்கடிதான் காரணம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை. அதேபோல், மத்தியில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறுவது மோசடியாகும்.


7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமாகும்போது, தமிழகத்தில் மட்டும் அதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது.


மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை அரசு ஊழியர்களும், பொதுமக்களும் வீழ்த்த வேண்டும். அவ்வாறு வீழ்த்தினால், அதற்கு அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றும்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. அதிர்ச்சி வைத்தியம் நிச்சயமாக பலன் தரும். வாக்குறுதி தவறியவர்களுக்கு வாக்கு இல்லை

    ReplyDelete
  2. தோற்கடித்தால் நாங்கள் கொடுக்கிறோம் என்று தானே சொல்ல வேண்டும். ஏன் செல்லவில்லை. யாரும் செல்லாததை சொல்லி விட்டார்கள். அவர்களால் மட்டும் தான் செய்ய முடியும். 2021 ல் அதிமுக செல்லவில்லை. ஆனால் அவர்களுக்கு 50% தபால் ஓட்டுகள் எப்படி விழுந்தது.

    ReplyDelete
  3. பகுதி நேர ஆசிரியையும் பணி நிரந்தரம் செய்வீங்களா

    ReplyDelete
    Replies
    1. யார் ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கு வாய்ப்பு இல்லை..

      Delete
    2. எஜமா உங்க மனசு சுத்த தங்கமுங்க நாக்குள மச்சம் உள்ள ஆளு நீங்க கோபப்படாதீங்க
      நீங்க சொல்லி பலித்து விடப்போகிறது

      Delete
    3. ஏம்மா ஏஜமா இருக்கிறது தெரியாமா இங்க வந்து புலம்பீட்டு இருக்க
      முதலில் ஏஜமான் கிட்ட மன்னிப்பு கேளுமா

      Delete
    4. உங்களுக்கு அற்ப சுய நலத்திற்காக ஓட்டு போட்டீர்கள் . இப்போது அனுபவியுங்கள். உங்களை போல சுய நலமிக்க ஆசிரியர் ஆகாமல் இருப்பதே எங்கள் குழந்தைங்களைக்கு நல்லது

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி