DPI வளாகத்தில் 10-ம் வகுப்பு புத்தகம் இல்லை: மாணவர், பெற்றோர் ஏமாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2024

DPI வளாகத்தில் 10-ம் வகுப்பு புத்தகம் இல்லை: மாணவர், பெற்றோர் ஏமாற்றம்

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ வளாகம்) உள்ள பாடநூல் கழக தலைமை அலுவலகத்தின் விற்பனை கவுன்ட்டர்கள், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டர், திருவான்மியூரில் வேளச்சேரி - தரமணி 100 அடி சாலையில் உள்ள பாடநூல் கழக கிடங்கில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


வரும் கல்வி ஆண்டுக்கான 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ தமிழ் பாடப் புத்தகங்கள், 8,9,11-ம் வகுப்புகளுக்கான மாநில பாடத் திட்ட தமிழ் புத்தகங்கள், 10, 12-ம் வகுப்பு பாட நூல்களும் நேற்று முதல் மேற்கண்ட இடங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என பாடநூல் கழகம் அறிவித்திருந்தது.


ஆனால், டிபிஐ வளாகத்தில் 10-ம் வகுப்பின் ஆங்கில பாட நூல் மட்டுமே நேற்று விற்கப்பட்டது. இதனால், மாணவர்கள், பெற்றோர் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘10-ம் வகுப்பு அனைத்து புத்தகங்களும் ஓரிரு நாளில் விற்பனைக்கு கிடைக்கும்’’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி