பொறியியல் சேர்க்கை 95,000 மாணவர்கள் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2024

பொறியியல் சேர்க்கை 95,000 மாணவர்கள் விண்ணப்பம்

 

தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் வரும் ஆகஸ்ட் மாதம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.


இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-ம் தேதி தொடங்கியது. இதுவரை 94,939 மாணவர்கள் (நேற்று மாலை 6 மணி நிலவரப்படி) பதிவு செய்துள்ளனர். அதில் 51,857 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். மேலும்,24,843 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ம் தேதியுடன்நிறைவு பெறுகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கோரப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி