தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதித்தேர்வை கட்டாயமாக்கக்கூடாது - ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2024

தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதித்தேர்வை கட்டாயமாக்கக்கூடாது - ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!

 

ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதித்தேர்வை கட்டாயமாக்கக்கூடாது பணிமூப்பு அடிப்படையில் அவர்களுக்குள்ளாக தேர்வை நடத்தி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் - நிறுவனத் தலைவர் - சா.அருணன் - வேண்டுகோள்.

தொடக்கக்கலவித்துறையில் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள் பட்டியலை தேர்வு செய்ய அந்த்ந்த வட்டாரக் கல்வி அலுவலருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர் , அதாவது தகுதி தேர்வு அடிப்படையில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க இந்த பட்டியலை தயார் செய்வதாக அறிகிறோம் , ஏற்கனவே ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு இடைநிலை ஆசிரியர்களின் பணி மூப்பை கணக்கில் எடுத்து பதவி உயர்வு வழங்குவது வழக்கம்  ஆனால்  கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தகுதி தேர்வை நடத்தி அதன் அடிப்படையில் தான் இடைநிலை ஆசிரியருக்களுக்கு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தேசித்து உள்ளதாக அறிகிறோம் , இதனால் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றமும் வருத்தமும் அடைந்துள்ளனர் இடைநிலைநிலை ஆசிரியர்களின்  பணிமூப்பையும் மனநிலையும் கருத்தில் கொண்டு  தகுதி தேர்வு கட்டாயம் என்றாலும் இடைநிலை ஆசிரியர்களின் பணிமூப்பின் அடிப்படையில் பட்டியலை தயாரித்து அவர்களுக்குள்ளாக ஒரு தேர்வை நடத்தி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆரம்பப்பள்ளி தலையாசிரியர் பதவி உயர்வு வழங்க மாண்புமிகு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்


சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

3 comments:

  1. https://t.me/physicspaidtest

    PG TRB Physics & TNSET Physical Science Test Series

    Whatsapp or telegram +91 93457 30172

    ReplyDelete
  2. Padikka theriyathavanukku thalamai assiriyar paniya

    ReplyDelete
  3. TET பதவி உயர்வு வழக்கை எதிர்த்து ஏற்கனவே பல்வேறு சங்கங்களின் வலியுறுத்தலினால் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. NCTE ஐ எதிர் மனுதாரராக சேர்த்துள்ளது. NCTE 23.8.2010 க்கு முன் பணிபேற்ற ஆசிரியர்களுக்கு TET தேவைமில்லை என பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது.இதனடிப்படையில் ஏற்கனவே அலகாபாத் உயர் நீதி மன்றம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை எனக்கூறிவிட்டது. தமிழக அரசு இந்த வழக்கை நடத்தினால் போதும். அனைத்து பதவி உயர்வு வழக்குகளும் சரியாகி விடும். அனைத்து ஆசிரியர் சங்கங்களும்
    அமைச்சர் மற்றும் அதிகாரி களைப் பார்த்து அந்த வழக்கை நடத்த வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் குறுக்கு வழியில் பதவிக்கு வர நினைப்பவர்கள் நீதிமன்றம் சென்று தடுக்க முயற்சி செய்வர்.பதவி உயர்வுகள் கிடைக்க மேலும் கால தாமதம் ஆகும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி