TRB Exam - பட்டதாரி ஆசிரியர்‌ தேர்வு - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2024

TRB Exam - பட்டதாரி ஆசிரியர்‌ தேர்வு - மறுதேர்வு நடத்தக் கோரிக்கை!

 

2023ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் போட்டித் தேர்வில் பல்வேறு வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டு இருப்பதாகக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.  


2023-2024 ஆம்‌ ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர்‌ , வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை எழுத மொத்தம் 41,478 தேர்வர்கள்‌ விண்ணப்பித்து இருந்தனர்‌. 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதி இருந்தனர். 


மே மாதம் வெளியான தேர்வு முடிவுகள்


தேர்வு முடிவுகள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ மே 18 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய தேர்வர்களின்‌ மதிப்பெண்களுடன்‌ பணிநாடுநர்கள்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு தாள்‌ 2-க்குத்‌ தகுதி பெற்ற ஆண்டுகளின்‌ அடிப்படையில்‌ தகுதி மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டன. மொத்த மதிப்பெண்கள்‌ அடிப்படையில்‌, 1: 1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கான பட்டியல்‌ தயார்‌ செய்யப்பட்டது.


இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் போட்டித் தேர்வில் பல்வேறு வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டு இருப்பதாகக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.  


குறிப்பாக தமிழில், 48ஆவது கேள்வி உட்பட 6 வினாக்கள் தவறானவை. அதேபோல ஆங்கிலப் பாடத்தில் 13 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பாக 121ஆவது கேள்வி தவறானது என்று கூறப்படுகிறது. கணிதப் பாடத்தில் 17 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன என்று தேர்வர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.


அதேபோல இயற்பியல் பாடத்தில் 7 வினாக்களும் வேதியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளில் 12 வினாக்களும் தவறாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விலங்கியல் பாடத்தில் இருந்து 3 கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன. புவியியல் பாடத்தில் இருந்து 11 வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரலாறு பாடத்தில் இருந்து 13 கேள்விகள் தவறானவை என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில் தவறான கேள்விகளைத் தயாரித்த ஆசிரியர் தேர்வு வாரியம், கேள்விகளுக்கு பதிலளித்த தேர்வர்களுக்கு உரிய கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும்


அதேபோல ஓரிரு கேள்விகள் என்றால் கூட கவனக் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு தேர்விலும் ஏராளமான கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருப்பது ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று தேர்வர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதற்கிடையே தேர்வுகாக டிஆர்பி வெளியிட்ட இறுதி விடைக் குறிப்பிலும் 2 தவறுகள் இருப்பதாகத் தேர்வர்கள் சாடி உள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 


தேர்விலேயே குளறுபடி


2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், 11 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு எழுதிய நிலையில், அதிலும் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பது அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. 

20 comments:

  1. இது தான் திராவிடமாடலா????.

    ReplyDelete
  2. இவ்வளவு குழப்பத்திற்கு காரணமே இந்த 2013 தேர்வர்கள் தான்....

    ReplyDelete
    Replies
    1. தவறாக வினாத்தாள் வடிவமைத்த trb காரணம் இல்லையா.

      Delete
    2. உனக்கு போன மாதம் தம்பி பிறந்ததாக தகவல்

      அதற்கும் 2013 தான் காரணம்.

      Delete
  3. பத்து வருடம் கழித்து இந்த அளவுக்கு முயற்சி செய்து பணி நியமனம் செய்யவேண்டும் என்று செயல்பட்டது சாதனை தி மூ கா தான் மிக்க நன்றி !!!!

    ReplyDelete
  4. All the medias kindly help us to conduct reexam....in English department 35 questions are wrong....நாங்கள் எங்கள் வேதனையை பத்து நாட்களாக வெளிப்படுத்தி வருகிறோம்...தலபதியார் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    ReplyDelete
  5. கலைஞரின் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கும் போதுதான் இந்த குழப்பத்திற்க்கு தீர்வு கிடைக்கும்

    ReplyDelete
  6. முற்றிலும் உண்மை 10% கேள்விகள் தவறாக இருந்தால் மீண்டும் தேர்வு வைக்க வேண்டும் என்று கோர்ட் ஆர்டர் உள்ளது ஆனால் இங்கு 13% தவறுகள் ஏற்பட்டுள்ளது 10 வருட காத்திருப்பதற்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த நியமன தேர்வு நியாயமான தேர்வாக இல்லை எழுதிய அனைவருமே இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் இதற்குத் தேர்வு வாரியத்திடம் கால் செய்து கேட்கும் போது அவர்கள் கூறிய அலட்சியமான பதில் கோபத்தை தான் உண்டாக்கியது முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு இதைப் பற்றி தெரிவித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. பத்து நாட்களாக அனைத்து ஆசிரியர்களும் மன உளைச்சலில் உள்ளனர் இதற்கு இந்த அரசாங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது ஆசிரியர்களை கண்டு கொள்வதே இல்லை அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் அத்தனையிலும் தவறுகள் தான் கண்ணுக்கு தெரிகிறது. காலிப் பணியிடங்களை அதிகரிக்கவும் இல்லை மரணம் முறையில் சீரற்ற முறையில் சென்று கொண்டே இருக்கிறது ஏன் தான் ஆசிரியர் படிப்பு படித்தோமோ என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டியதாகவே உள்ளது யாரும் கண்டு கொள்ளாத நிலை

    ReplyDelete
    Replies
    1. இதை எவ்வாறு எதிர்கொள்வது வழிமுறைகள் என்பது குறித்து தகவல் தெரிந்தால் கூறவும்

      Delete
  7. தவறாக உள்ள வினாக்கள் மற்றும் ஒரே வினாவிற்க்கு இரண்டு விடைகள் இந்த வினாக்கள் அனைத்தும் நீக்கிவிட்டு மீதீ உள்ள வினாக்களுக்கு மட்டும் மதிபென் தந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. No use because all candidates will lose that mark means same candidate will come same place

      Delete
  8. தவறாக உள்ள வினாக்கள் மற்றும் ஒரே வினாவிற்கு இரண்டு விடைகள் உள்ள வினாக்களை நீக்கிவிட்டு மீதி உள்ள வினாக்களுக்கு மட்டும் மதிப்பெண் தந்தால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  9. Maranam mattum tha varala oru oru nodium vethanai

    ReplyDelete
  10. 2013 2013 nu sollittu oru group irukkume.... Avanga ellorum enga ponanga.... Silent ah irunthu iruntha 2017 le 13 17 batches i mix panni etho oru method la posting pottu irupaaanga.... Atha spoil pannathe 2013 candidates thaaanee.... Ippo anubavinga nalla.... Ippo CV list la irukapavangalla 90% 2017 2023 candidate thaaan....2013 Again DPI la poi protest pannunga.... ahhhhhhh ahhhhhhh ahhhhhhh....

    ReplyDelete
  11. Oruththanaiyum vazha vida mattinggada porampokku naygala nalla padichi ezutha vendiyathuthana

    ReplyDelete
  12. Daiii poi case pottu stay order vaangunga da ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி