அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள் 5,842 பேருக்கு மாற்றுப் பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2024

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள் 5,842 பேருக்கு மாற்றுப் பணி

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 5,842 உபரி ஆசிரியர்களை மாற்றுப் பணி அடிப்படையில் அரசு பள்ளிகளில் பணியமர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: “தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 5,545 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 299 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் (மொத்தம் 5,842) உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அரசு மானியம் விரயமாவதாகவும், அதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.


இதைத் தொடர்ந்து, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் மாணவர்கள் நலன் கருதியும், உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதி இழப்பை தவிர்த்திடும் பொருட்டும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்யவும், மாற்றுப்பணி வழங்கவும் உரிய ஆணை வழங்குமாறு தொடக்கக் கல்வி இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டார்.


அவரின் கருத்துருவை கவனமாக அரசு பரிசீலித்து அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2023-2024-ம் ஆண்டுக்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாக பணிபுரிந்து வரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல், மாற்றுப்பணி வழங்க அனுமதித்து ஆணையிடுகிறது.


வழிகாட்டு நெறிமுறைகள்: பணிநிரவல் மேற்கொள்ளும்போது உபரி ஆசிரியர்களை முதலில் வட்டாரத்துக்குள்ளும், அங்கு காலியிடம் இல்லை என்றால், மாவட்டத்துக்குள்ளும் பணி நிரவல் செய்ய வேண்டும். ஆசிரியர் விருப்பப்பட்டால் மாவட்டத்துக்கு வெளியே பணிநிரவல் செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை அதிகம் உள்ள அரசு, ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணியில் செல்ல அனுமதிக்க வேண்டும்,” என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

11 comments:

 1. அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் ஒருங்கிணைத்து மாநில அளவில் பொது கலந்தாய்வு நடத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

  ReplyDelete
 2. அரசு உதவி பெறும் பள்ளிகளே முதலில் சாபக்கேடு.... அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்....

  ReplyDelete
 3. அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசுடைமை ஆக்க இந்த அரசு கொள்கை முடிவு எடுக்க துணிவு இருக்கிறதா

  ReplyDelete
  Replies
  1. Pure government schools irukkum pothu ethukku aided school????? Antha school teachers entha method appointment aagaraanga..... Entha competitive exam eluthui antha job ku poraaanga???? Avangalukku kudukara salary ellam thandam..... Knowledge illatha persons.....

   Delete
  2. அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தாலே போதும் . அரசு உதவி பெறும் பள்ளிகள் குறைந்து விடும்...

   அரசு பள்ளியை அரசூழியர்களே நம்புவது இல்லை.

   ஏன் அரசே நம்புவதும் இல்லை


   அரசு நிகழ்ச்சிகள் . மற்றும் அரசு சார்ந்த செயல்பாடுகளை எந்த அரசு பள்ளிகளில் நடத்துகிறார்கள்... எல்லாம் அரசு உதவி பெறும் பள்ளி.அல்லது தனியார் பள்ளி கல்லூரிகளில் நடத்துகிறது ..ஏன் சார்

   அறிவே இல்லாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தான் அதிக விழுக்காடு தேர்ச்சி சதவிகிதத்தை கொடுக்கின்றார்கள்....   ஏன் சார் அறிவு அதிகம் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் கொடுக்க முடியவில்லை..

   இங்கு தென்ட சம்பளம் யார் வாங்குகிறார்கள் என்பது மக்களுக்கு தெரிந்ததால் தான் அரசு உதவி பெறும் பள்ளி நோக்கி பெற்றோர்கள் செல்கின்றனர்.....

   Delete
 4. முதலில் நம்ம முதுகில் உள்ள அழுக்குகளை கழுவினால் போதும் சார் ..‌மாற்றம் தானாக வரும் ....

  மற்றவர்களை குறை கூறும் முன் நம் குறைகளையும் நாம் பார்க்க வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. Unknown
   June 20, 2024 at 10:31 PM
   அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தாலே போதும் . அரசு உதவி பெறும் பள்ளிகள் குறைந்து விடும்...

   அரசு பள்ளியை அரசூழியர்களே நம்புவது இல்லை.

   ஏன் அரசே நம்புவதும் இல்லை


   அரசு நிகழ்ச்சிகள் . மற்றும் அரசு சார்ந்த செயல்பாடுகளை எந்த அரசு பள்ளிகளில் நடத்துகிறார்கள்... எல்லாம் அரசு உதவி பெறும் பள்ளி.அல்லது தனியார் பள்ளி கல்லூரிகளில் நடத்துகிறது ..ஏன் சார்

   அறிவே இல்லாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தான் அதிக விழுக்காடு தேர்ச்சி சதவிகிதத்தை கொடுக்கின்றார்கள்....   ஏன் சார் அறிவு அதிகம் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் கொடுக்க முடியவில்லை..

   இங்கு தென்ட சம்பளம் யார் வாங்குகிறார்கள் என்பது மக்களுக்கு தெரிந்ததால் தான் அரசு உதவி பெறும் பள்ளி நோக்கி பெற்றோர்கள் செல்கின்றனர்.....

   Delete
 5. தமிழ்நாட்டில் கல்வி துறையை காப்பாற்ற யாரும் இல்லை

  ReplyDelete
 6. Avanga yellorum TET pass panirukaangala?????

  ReplyDelete
 7. UG NET cancelled due to question leak and corpen copy not available in OMR.similar issue in UG TRB no OMR corpen copy and Grace marks to some candidates only for wrong questions

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி