9-12 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இணையதளம் மூலம் மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2024

9-12 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இணையதளம் மூலம் மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!


2022-23 , 2023-24 கல்வியாண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-12 வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கும் அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

 தற்போது 2024 2025 ஆம் கல்வியாண்டிற்கான மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி ஆசிரியர்களுக்கு 19.06.2024 முதல் 22.06.2024 வரை நான்கு நாள்கள் இணையத்தளம் மூலம் மண்டலவாரியாக வழங்கப்பட உள்ளது . இப்பயிற்சிக் கட்டகம் 20 முதல் 30 நிமிடங்களில் செய்திடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . எனவே , ஆசிரியர்கள் , மின்னுருவாக்கம் செய்யப்பட்ட பயிற்சிக் கட்டகங்களை பள்ளியில் உள்ள மடிக்கணினி , உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள கணினிகள் மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் நிறைவு செய்யவேண்டும் . எனவே ஆசிரியர்கள் http://lms.tnsed.com/ என்ற இணையமுகவரியில் தங்களது EMIS ID , Password பயன்படுத்தி My Courses ல் சென்று மின்னுரு கட்டகங்களை முடித்தல் வேண்டும்.


 ஆசிரியர்களுக்கான பயிற்சியைத் தொடர்ந்து , மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் 24.06.2024 முதல் 28.06.2024 வரை வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கான மின்னுருவாக்கம் செய்யப்பட்ட கட்டகங்கள் ஒவ்வொன்றும் 20 நிமிடத்தில் செய்திடத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

 SCERT - Emotional Wellbeing Training - Proceedings👇

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி