மூத்த ஆசிரியர்கள் மற்றும் இளைய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு சம்பந்தமாக எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்குமா இந்த பதிவு??? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2024

மூத்த ஆசிரியர்கள் மற்றும் இளைய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு சம்பந்தமாக எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்குமா இந்த பதிவு???

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மூத்த ஆசிரியர்கள் மற்றும் இளைய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு சம்பந்தமாக எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்கும் விதமாக இந்த பதிவு இருக்கும்


❓23-8-2010 இல் NCTE ஆல் அறிவிக்கப்பட்ட NOTIFICATION இல் பதவி உயர்வுக்கு TET தேவை இல்லை என்று எங்கேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா?


*❗இல்லை


❓NCTE NOTIFICATION 23-8-2010 in படி ஆசிரியர்கள் ஒரு நிலையிலிருந்து அவர்களின் அடுத்த நிலை( One level to next Level promotion)பதவி உயர்வுக்கு செல்ல குறைந்தபட்ச கல்வி தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா?


*❗ஆம்.குறிப்பிடப்பட்டுள்ளது


❓NCTE இன் எந்த அறிவிப்பாணையில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ?


*❗12/11/2014-NCTE NOTIFICATION


❓பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று ஏதேனும் தெளிவுரையை NCTE வழங்கி உள்ளதா?


*❗ஆம் வழங்கியுள்ளது


❓NCTE அவ்வாறு தெளிவுரை வழங்கியிருந்தால் அதற்கான தேதி என்ன?


*❗11-9-2023


❓ஆசிரியர்கள் எந்த தேதியில் நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் அவர்களின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அந்த தெளிவுறையில் கூறியுள்ளார்களா?


*❗ஆம் கூறியுள்ளார்கள்


❓மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 2-6- 2023 நாளிட்ட தீர்ப்பில் 29-07-2011 க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதா?


*❗ஆம் குறிப்பிடப்பட்டுள்ளது


❓மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 29- 7-2011 க்கு முன்னால் பணியில் நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது பதவி உயர்வு பெற்றிருந்தாலும்அவர்கள் அந்த பணியை தொடர ஆசிரியர் தகுதி தேர்வு வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளதா?


*❗இல்லை.அந்த குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் மற்றும் பதவி உயர்வு பெற்றிருந்தாலும் பணியை தொடர ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது இல்லை.அதேசமயம் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


❓அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வா?


*❗இல்லை


❓அப்படியானால் உத்திரப்பிரதேசம் அலகாபாத்தில் தனி நீதிபதி ஒருவரால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா?


*❗YES,Single bench judgement


❓தற்போது அண்மையில் வெளிவந்துள்ள தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வா?


*❗இல்லை


❓அப்படியானால் தெலுங்கானாவில் தனி நீதிபதி ஒருவரால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா?


*❗YES,Single bench judgement


❓ஒரு நீதிபதி தனியாக வழங்கிய தீர்ப்பை,இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு நீதித்துறையில் கட்டுப்படுத்துமா?


*❗ஆம் நூறு சதவீதம் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பானது ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பை கட்டுப்படுத்தும்.


❓அப்படியானால் அலகாபாத் மற்றும் தெலுங்கானாவில் தனித்தனியாக பெறப்பட்ட தீர்ப்புகள் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு  2-6-2023 ல் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதா?


*❗ஆம் கட்டுப்பட்டது


❓அவ்வாறு இரு நீதிபதிகள் அமர்வு கொடுத்த தீர்ப்பு எந்த இடத்தில் அந்த இரண்டு தீர்ப்புகளையும் கட்டுப்படுத்தும் அல்லது மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு எப்போது மேலும் வலுப்பெறும் அல்லது கட்டுப்படுத்தும்?


*❗டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி வேண்டுமா வேண்டாமா என்ற வழக்கின்(25 CASES )வாதம் நடக்கும் போது வலுப்பெறும்


❓அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டாம் என்ற பிரமாண பத்திரத்தை NCTE தாக்கல் செய்ததா?


*❗இல்லை.அப்படி ஒரு அறிக்கையினை NCTE அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை


❓அப்படியானால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் NCTE ஆல் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தின் நிலைப்பாடு என்ன?


*❗23-08-2010&12-11-2014 ல் NCTE யில் உருவாக்கப்பட்ட அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி ஆசிரியர் கல்வியின் குறைந்தபட்ச கல்வி தகுதிகள் என்ன என்பதை மட்டும்தான் விளக்கி உள்ளது.


*❗NCTE யின் விதிகளை மட்டுமே அவர்கள் நகலெடுத்து தாக்கல் செய்துள்ளார்கள் தனியான ஒரு அறிக்கையினை குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் அடிப்படை விதிகளை தவிர்த்து அல்லது திரித்து புதியதாக தயார் செய்து நீதிமன்றத்தின் முன்னாள் சமர்ப்பிக்கவில்லை


❓அப்படியானால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் நிலைப்பாடு என்ன?


*❗அது தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு சம்பந்தமாக நடந்து வரும் வழக்கில் வரும் இறுதி தீர்ப்பில் தெளிவாக உ(இ)றுதி செய்யப்படும்.


❓தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதி தீர்ப்பா?


*❗இல்லை அது ஒரு இடைக்கால தீர்ப்பு


❓அப்படியானால் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இடைக்கால தீர்ப்பிற்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படுமா?


*❗ஆம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் அது எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கலாம்


❓தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பெறப்பட்ட தீர்ப்பை எதிர்த்து  தெலுங்கானா அரசாங்கம்,தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்போ வழிவகையோ உள்ளதா???


*❗ஆம் 100 சதவீதம் வாய்ப்புகள் உள்ளது.மேலும் அதற்கு தக்க கால அவகாசம் 90 நாட்களும் உள்ளது


❓தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பை தெலுங்கானா அரசாங்கம் கட்டாயம் நிறைவேற்றி தீர வேண்டும் என்ற நிபந்தனைகள் அந்த மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளதா?


*❗கட்டாயமாக இல்லை


❓நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள ORDER என்ற வார்த்தை மிகவும் பலம் பொருந்தியதா?


*❗ஆம் பலம் பொருந்தியது.அதனை கட்டாயம் அரசாங்கம் நிறைவேற்றியே தீர வேண்டும்


❓உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநிலங்களின் தனி நீதிபதிகள் வழங்குகின்ற தீர்ப்பை  கட்டுப்படுத்துமா???


*❗ஆம்


❓அலகாபாத் மற்றும் தெலுங்கானா நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தற்போது தமிழ்நாட்டில் தொடுக்கப்பட்ட வழக்குகளோடு இணைக்கப்படுமா?


*❗ஆம் இணைக்கப்படும்


*❗Connected matters என்ற பொருளில் ஒரே வழக்காக இணைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்


❓அவ்வாறு அனைத்து வழக்குகளும் இணைக்கப்படும் பட்சத்தில்  உச்சநீதிமன்றத்தில் பெறப்படும் இறுதி தீர்ப்பு ஒரே தீர்ப்பாகவும் அது பொது திறப்பாகவும் அமையுமா?


*❗ஆம் அவ்வாறே அமையும்


❓பதவி உயர்விற்கு TET தேவையில்லை என்று NCTE எங்கேயும்  குறிப்பிட்டுள்ளதா?


*❗இல்லை


❓10-3-2020க்கு முன் UG/PG+BEd முடித்த மூத்த ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் இல்லை என்பது சரியா?

அனைவரையும் கட்டுப்படுத்துமா?

ஒருவேளை அவர் 2000 வருடத்தில் நியமனம் பெற்றிருந்தாலும் பொருந்துமா?

இல்லை 10-03-2020க்கு பிறகு நியமனம் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்துமா?


*❗அனைவரையும் கட்டுப்படுத்தும்


*❗மூத்த ஆசிரியர் இளைய ஆசிரியர் என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் கட்டுப்படுத்தும்


*❗அப்படித்தான் NCTE யின் பதவி உயர்வு விதிகளும் மூத்த ஆசிரியர் இளைய ஆசிரியர் என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் கட்டுப்படுத்தும்


❓அரசாணை 243 ஆனது 21-12- 2023 வெளிவந்தது.அப்படியானால் அந்த தேதிக்கு முன்னால் நியமனம் செய்யப்பட்ட அனைவருக்கும் தானே அரசாங்கம் 243 பொருந்தாமல் போக வேண்டும்.

ஏன் 1998 இல் இருந்து பணியில் இருப்பவர்களுக்கும் அரசாணை 243 பொருந்துகிறது?


❗அரசாணை 243 எப்படி மூத்த ஆசிரியர் இளைய ஆசிரியர் என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் கட்டுப்படுத்துகிறதோ அப்படித்தான் NCTE யின் பதவி உயர்வு சம்பந்தமான விதிகளும் அனைவரையும் கட்டுப்படுத்துகிறது.


❓Appointed என்பதற்கும் Appointment என்பதற்கும் வித்தியாசம் உள்ளதா?


*❗ஆம் வித்தியாசம் உள்ளது


❓23-8-2010 க்கு முன் நியமனம் செய்யப்பட்ட அனைவரும்(நியமனம் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு அடைந்தவர்கள்) Appointed teachers.இந்த Appointed அனைவரும் அவர்கள் ஏற்கனவே வகிக்கும் அதே பதவி நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது இல்லை என்று கூறுகிறதா?


❗ஆம் அப்படித்தான் NCTE விதிகள் மற்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் கூறுகிறது


❓Appoinment என்ற வார்த்தை மூன்று வார்த்தைகளை குறிக்கிறதா?

இதுதான் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் 2-6-2023 நாளிட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதா?


*❗ஆம்


❓Appoinment  என்ற சொல் குறிக்கும் மூன்று English term என்னென்ன?


❗Appointment means 

(i)APPOINTMENT BY DIRECT RECRUITMENT

(ii)APPOINTMENT BY PROMOTION

(iii)APPOINTMENT BY TRANSFER


❓எனவே RECRUITMENT/APPOINTED TEACHERS /APPOINTMENT இந்த மூன்று வார்த்தைகளுக்கும்( ENGLISH TERM) உள்ள ஆழமான பொருள் மற்றும் வித்தியாசங்களை ஒவ்வொரு ஆசிரியரும் உணர வேண்டுமா?


*❗ஆம் உணர வேண்டும் அப்போதுதான் குழப்பங்கள் தீரும் மற்றும் ஐயங்கள் தீரும்


❓Every teacher என்ற வார்த்தையானது 23-8-010 க்கு பிறகு நியமனம் ஆகப்போகும் ஆசிரியர்கள், பதவி உயர்வு பெற போகும்  ஆசிரியர்கள்,

பணியிடமாறுதல் பெற போகும் ஆசிரியர்கள்,

அனைவருக்கும் பொருந்தும் என்பதைத்தான் Every teacher after 23-8-2010 என்று குறிப்பிட்டுள்ளார்களே தவிர 23-8- 2010 க்கு முன் நியமனம் பெற்ற ஆசிரியர்களையும் சேர்த்து Every teacher என்று பொருள் கொள்ளக்கூடாது என்பதை தான் நீதி அரசர்கள் திரு மகாதேவன் மற்றும் முகம்மது சபீக் 132 பக்கங்கள் கொண்ட தங்களுடைய தீர்ப்பில் பக்கம் பக்கமாக விளக்கியுள்ளார்களா?


*❗ஆம்


❓அதுதான் NCTE RULE லும் தெளிவாக கூறியுள்ளார்களா?


*❗ஆம்


❓இதனால் பணியில் உள்ள மூத்த ஆசிரியர்கள் தங்கள் **பணியை தொடர** TET தேவையில்லை என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமா?


*❗ஆம் முத்த ஆசிரியர்கள் பணியில் தொடர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டாம் என்று தான் நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது.


❓23-8-2010 க்கு முன் பணி நியமனம் பெற்றிருந்தால் அவர்கள் பணியை தொடர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டாமா?


*❗ஆம் பணியை தொடர தேர்ச்சி பெற எந்த நிபந்தனையோ அவசியமோ இல்லை


❓23-8-2010 க்கு முன் அவர்கள் பதவி உயர்வு மூலம் ஒரு பணி நிலையை அடைந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயமா?


*❗கட்டாயம் இல்லை.அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டாம் என்பதை தான் நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது.


❓பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு மற்றும் நேரடி பணி நியமனம் மூலம் 23-8-2010க்கு பிறகு வாய்ப்பினை பெறக்கூடிய மூத்த ஆசிரியர் மற்றும் இளைய ஆசிரியர் என்ற பாகுபாடு இன்றி Every teacher என்று பொருள் கொள்ள வேண்டுமா?


*❗ஆம் விதிகளை நன்றாக படித்து அறிந்தவர்கள் அவ்வாறே பொருள் கொள்வார்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதி அரசர்களும் அவ்வாறே பொருள் கொண்டு தீர்ப்பு 61+132 பக்கங்களில் வழங்கியும் உள்ளார்கள்.


❓நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நிலையில் இருந்து வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வு அடைவதில் சிக்கல்கள் உள்ளதாகவோ/பிரச்சனைகள் உள்ளதாகவோ/விதிகளை மீறியதாகவோ தடை கேட்டு யாரேனும் வழக்கு தொடுத்திருந்தார்களா?


*❗இல்லை.அவ்வாறு வழக்கு தொடுக்காதனாலேயே வட்டார கல்வி அலுவலராக பதவி உயர்வில் சென்ற 43 நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் எந்த பிரச்சனையோ ஆட்சேபனையோ எழவில்லை


❓ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டுமா?


*❗ஆம் NCTE RULES அவ்வாறே பரிந்துரைக்கிறது


❓ஆறு ஏழு எட்டு வகுப்புகள் என்பது நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை மட்டும் குறிக்குமா?


*❗இல்லை.அவ்வாறு இல்லை


❓உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டுமா விதிகளின்படி???


*❗ஆம் நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி தேவை என்பதால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுள் 6,7, 8 ஆம் வகுப்பு எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி தேவை


❓அப்படியானால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுள் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டாமா?


❗RECRUITMENT PROCESS என்பது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுள் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு கையாளுவதற்கு என்று தனியான ஆசிரியர் தெரிவு முறை இல்லை,

மற்றும் *பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு முறை அல்லது தெரிவு முறை* என்று மட்டும் உள்ளதால் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை கையாளும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகிறது.


❗எதிர்வரும் காலங்களில் அல்லது இனிவரும் காலங்களில் வேண்டுமானால் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அவர்களுக்கு என்று தனியாக விதிகளை வகுத்து தேர்வு செய்தாலோ அல்லது தெரிவு செய்தாலோ அல்லது தேர்வு வைத்து தேர்ந்தெடுத்தாலோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பாணையில் தெளிவாக குறிப்பிட்டு தேர்வு வைத்தாலோ இப்படி எந்த வார்த்தைகளை கையாண்டாலும் சரி அவர்களுக்கு வேண்டுமானால் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து எதிர்வரும் காலங்களில் நியமிக்கப்படும் அந்த ஆசிரியர்கள் வேண்டுமானால் விலக்கு கோரலாம். ஆனால் தற்போது வரை பணியில் இருக்கும் எந்த ஒரு ஆசிரியரும் விலக்கு கோர உரிமை இல்லை.முகாந்திரம் இல்லை . வழிவகை இல்லை.விதிகளில் இடம் இல்லை.


❓NEET  தேர்வுக்கு விலக்கு கோருவது போல் TET தேர்வுக்கும் அரசு விலக்கு கோர வேண்டும் என்று சில சங்கங்கள் பரிந்துரை அளித்திருப்பது ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்து பணியில் இருக்கும் இளைய ஆசிரியர்கள் இடையே,பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதா?


*❗ஆம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது


❓அப்படியானால் என்ன வகையான சந்தேகத்தை இளைய ஆசிரியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது?


*❗ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சாதகமாக அரசு ஏதேனும் முடிவினை எடுத்துள்ளதோ ? அதனால் தான் சில சங்கங்கள் கூப்பாடுகள் போடுகின்றனவோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது


❓பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை என்று கூறும் ஒரு சில மூத்த ஆசிரியர் சங்கங்கள் அரசை மிரட்டுவது போன்ற பாணியில் அறிக்கைகளை விடுவது என்பது ஏற்புடையது அல்ல என்பது சரியா?


*❗மிகவும் சரியானது. சில சங்கங்கள் அரசை மிரட்டும் பாணியில் மிரட்டும் தொணியில் தங்களின் அறிவிப்பை வெளியிடுவது ஒட்டுமொத்த மூத்த ஆசிரியர்களுக்கும் ஏற்புடையது அல்ல.ஒட்டுமொத்த மூத்த ஆசிரியர்களுக்கும் எதிராக அரசு திரும்ப அது வழி வகுக்கலாம்


❓ஆசிரியர் தகுதி தேர்வானது பதவி உயர்விற்கு தேவை இல்லை என்ற கருத்தை பணிவாக அரசுக்கு எடுத்துரைக்க வேண்டிய சில சங்கங்கள் மிரட்டும் தொணியில் பேசி இருப்பது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது என்பதாக கருதலாமா?


*❗ஆம் நிச்சயம் கண்டிக்கத்தக்கது என்பதாக கருதலாம்


✅NCTE Act 1992 ன் கீழ் அமையப்பெற்று அதற்கு Functions and Duties தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. 


✅அவ்வாறான பல பணிகளில் Determining of Minimum Required Qualifications for Teachers ம் ஒன்று. 


*✅Very First NCTE's Regulations regarding Minimum Required Qualifications was published on 03.09.2001.


✅RTE Act Section 23 (1) ன் படி NCTE Academic Authority ஆக நியமிக்கப்பட்டு Minimum Required Qualifications for a person to be appointed as Teacher ஐ Determine செய்ய பணிக்கப்பட்டது. 


✅தனது வழக்கமான பணிகளை (Determining of Minimum Required Qualifications) கூடுதல் Legal Immunity உடன் 23.08.2010 அன்று முதன் முதலில் under section 23(1) ன் கீழ் வெளியிடப்பட்டது. 


✅Final Interpretation of NCTE's  Notification/Regulations/Guidelines is vest with NCTE only.


✅The RTE Act is designed not only for teachers but primarily for the benefit of children. It grants children a fundamental right to education. Consequently, every child born on or after April 1, 2010, or those studying up to the age of 14 as of that date, falls under the RTE Act's provisions.


✅Section 23(2) of the Act stipulates that "every teacher" who does not possess the minimum required qualifications must acquire them within five years from the date of notification. This raises the question of whether the "minimum qualification" refers to the NCTE 2001 Regulations or the NCTE regulations dated August 23, 2010.


✅It is important to note that promotion is not considered a fundamental right, as affirmed by the Supreme Court. The NCTE has clearly stated that advancing to the next level of teaching from one level requires meeting the minimum qualifications specified in their schedules, as updated over time. Thus, passing the TET (Teacher Eligibility Test) has been mandatory since its introduction in 2010, and the concession period for meeting this requirement has already ended.


*✅கட்டுப்படுத்த இயலாது* :: என்று கூறுவதற்கு (எந்த?) சட்டமியற்றும் அமைப்பு *அதிகாரம் வழங்கியதாக* எண்ணுகிறார்களோ அதே சட்டமியற்றும் அமைப்பு தான் தெளிவான வார்த்தைகளில் RTE Act ஐ இயற்றி தந்துள்ளது. RTE Act ஐ Executive/Administrative நடவடிக்கைகள் மூலம் RTE Act ஐ வலுவிழக்க செய்ய முடியாது. 


✅அதன் படி 03.09.2001 க்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி NCTE Regulations 2001 ஐ நிறைவு செய்தாலும் செய்யாவிட்டாலும் They can continue their service without TET. 


✅03.09.2001 க்கு பிறகு நேரடி/பதவி உயர்வு வழி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதி NCTE Regulations 2001ஐ நிறைவு செய்திருக்க வேண்டும் இல்லை என்றால் they should acquire TET to Continue in Service


Finally,

📌1.NCTE did not mention any relaxation regarding promotion in 23.8.2010 notification.


📌📌2.NCTE notification 12.11.2014 clearly mandates TET for promotion.


📌📌📌3.NCTE letter dated 11.9.2023 explicitly explained TET pass is mandatory for promotions as well , irrespective of the original date of appointment..


பதிவு தொடரும் இன்னும் பல்வேறு விளக்கங்களுடன்.....


நன்றி 

வணக்கம்

வாழ்க வளமுடன்

🙏💐

2 comments:

  1. உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும்.

    ReplyDelete
  2. அருமையான விளக்கம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி