அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 8, 2024

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்!

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை & பண்பாட்டுத் துறை சார்பில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம்!

கல்லூரி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ / மாணவியரில் பகுதி நேரமாக கலைகள் பயில உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் வாரம் இரண்டு நாட்கள் பகுதி நேர கலை பயிற்சி அளிப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


செவ்வியல் கலை , கிராமியக்கலை , கவின் கலை ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு கலையில் முதற்கட்டமாக 100 கல்லூரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் . இக்கலை பயிற்சி அளித்திட தொகுப்பூதியத்தில் கலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் . குரலிசை , தேவாரம் , மிருதங்கம் , பரதநாட்டியம் , ஓவியம் , நவீன சிற்பம் , கைவினை , கிராமிய பாடல் , கரகம் , தப்பாட்டம் , ஒயிலாட்டம் , சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை வடிவங்களில் 100 பகுதி நேர ஆசிரியர்கள் இரண்டு மணி நேர வகுப்புகளுக்கு ரூ .750 / -வீதம் மதிப்பூதியத்தில் ஆண்டுக்கு 80 வகுப்புகள் மேற்கொள்வதற்கு தொகுப்பூதியதில் நியமனம் செய்யப்பட உள்ளனர். 


பகுதி நேர கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ள கல்லூரிகள் . அக்கல்லூரி தேர்வு செய்துள்ள கலை மற்றும் பயிற்சி நடைபெற உள்ள நாள் மற்றும் நேரம் , விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி போன்ற விவரங்கள் கலை பண்பாட்டுத் துறையின் இணையத்தளத்தில் www.artandculture.tn.gov.in பதிவிடப்பட்டுள்ளது . கலை இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பகுதி நேரப்பணிக்கு 25.06.2024 அன்றுக்குள் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் . 

Temporary Teachers selection Order👇

Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி