BRTE - பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2024

BRTE - பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

2021-22ம் கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 500 நபர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் வழங்கப்பட வேண்டியவர்களை தவிர்த்து மற்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு ( zero counselling ) நடத்தப் பட வேண்டும் என பார்வை ( 1 ) ல் காண் அரசாணை எண் ( 1 டி ) 134 பள்ளிக் கல்வி ( ப.க .5 ( 1 ) த் துறை நாள் 18.08.2021 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்பட்டு பணியிட மாறுதல் அளித்து ஆணை வழங்கப்பட்ட நிலையில் ஆசிரியர் பயிற்றுநர்களால் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட ரிட் மனு எண் : 27908/2023 மற்றும் தொகுப்பு வழக்குகளின் மீது 10.04.2024 ல் வழங்கப்பட்ட தீர்ப்பாணையில் மாறுதல் பெற்றவர்கள் 30.04.2024 வரை பழைய பணியிடத்தில் தொடரவும் . 07.06.2024 க்குள் புதிய பணியில் சேரவும் ஆணையிடப்பட்டுள்ளது.


மேலும் மேற்காண் தீர்ப்பாணையினை எதிர்த்து பார்வை ( 3 ) ல் கண்டுள்ளவாறு ஆசிரியர் பயிற்றுநர்களால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு அம்மனு மீது 30.04.2024 நாளிட்ட தீர்ப்பாணை கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது .

BRTE - Transfer Counselling - Instruction - DSE Proceedings 👇

Download here

1 comment:

  1. When Teacher transfer counseling to be held please announce

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி