BT / BRTE - TRB ஆசிரியர் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2024

BT / BRTE - TRB ஆசிரியர் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை!!!

ஆசிரியர் தேர்வு வாரிய வெளியீடு:

2023 - ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் 3192 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை எண் 03/2023 , நாள் 25.10.2023,34 / 2023 , நாள் 15.11.2023 மற்றும் 3B / 2023 , நாள் 17.05.2024 அன்று வெளியிடப்பட்டது.

 விண்ணப்பதாரர்கள் 13.12.2023 வரை தேர்விற்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. Online மூலம் விண்ணப்பித்தவர்கள் 41,485 பேர் , அதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு 04.02.2024 அன்று " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் " OMR ( Optical Mark Reader ) வழியில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் ” OMR ( Optical Mark Reader ) வழியில் தேர்வு எழுதியோர் 40,136 பேர் . 2023 - ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் " OMR ( Optical Mark Reader ) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 18.05.2024 மற்றும் 22.05.2024 அன்று வெளியிடப்பட்டன. பணிநாடுநர்கள் " ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் ' OMR ( Optical Mark Reader ) வாயிலாக தேர்வு எழுதிய தேர்வர்களின் மதிப்பெண்களுடன் பணிநாடுநர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் // ற்குத் தகுதிபெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் அரசாணை ( நிலை ) எண் 147 பள்ளிக் கல்வித் ( ஆ . தே . வா ) துறை , நாள் 22.08.2023 - ல் தெரிவித்துள்ளவாறு தகுதி மதிப்பெண்களை ( Weightage marks ) சேர்த்து மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் , இவ்வாரிய அறிவிக்கையில் தெரிவித்துள்ளபடி அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு 1 : 1.25 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 


சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்புப் கடிதம் , ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது 


மேலும் கடந்த வாரம் தொடங்கிய சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் இரண்டாம் தேதி முடிவடைந்த நிலையில் பணி நியமனத்துக்கான கடைசி இறுதி பட்டியல் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள சூழ்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது ஆசிரியர்கள் சிலர் கேள்வித்தாளின் தன்மை சரி இல்லை என்றும் கேள்வித்தாளில் அநேக வினாக்கள் தவறான வினாக்கள் என சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுதாரர் சுதா அவர்களின் வழக்கு நீதியரசர் முன்னிலையில் வந்தது நீதியரசர் வழக்கின் தன்மையை ஆராய்ந்து முகாந்திரம் இருக்கிறதாக கூறி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அனைத்து பணி நியமங்களையும் நிறுத்தி வைத்து இரண்டு வாரங்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பதில்களை தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளார்

இது ஏற்கனவே தேர்வு பெற்றவர்களை கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு தேர்வு பெற்று பணி நியமனத்திற்காக காத்திருந்த ஆசிரியர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது

28 comments:

  1. மீண்டும் போட்டித்தேர்வு வைக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Case pottalal mattum than victo5

      Delete
    2. Case pottalal mattum thaan vetti

      Delete
    3. Stay order வாங்குனவர்க்கு மட்டும் re exam

      Delete
  2. Super pls continue case neethi vendum

    ReplyDelete
  3. One of the best solution is re exam only

    ReplyDelete
  4. Ithea velai ya than da irukinga.. star question a delete panalum Athea cut off thana... Mistake poga remaing question la edukama... Pass pannava athana peroda life la vilayaduringa.... mistake apdinu objection kuduthu keta kudukathana seivaanga..10 years kalichuc pottu .. marupadium vilyada arambichutingalada.... Ipdi panranala thanda entha posting podamataniga..

    ReplyDelete
    Replies
    1. கவலைப்படாதீங்க கண்டிப்பா உங்களுக்கு வேலை கிடைக்கும்

      Delete
    2. Sir oru 150 question n answer 💯 correct ah type pannamudiyadha. Thn y star question thn adhuku mark

      Delete
    3. Spelling mistake kuda check pannama epdi trb exm conduct pannudhu

      Delete
  5. Pass panna ellathukum posting podunga 2013la irundhu wait panrom tn government school vacancy ivalavudhana students admission athigama irukkuranga so edhu unmai

    ReplyDelete
  6. வழக்கு முடிய 5 மாதங்களுக்கு மேல் ஆகும்

    ReplyDelete
  7. Kindly consider the 2013 Tet batch.
    வயசே ஆகிபோச்சு அவர்களுக்கு

    ReplyDelete
  8. Case avanga major kum mattum potta mistake small a theriyumnu ellla major um join pannikitangalo.. ama matha major exam eluthamea ivangaluku epdi adutha major la irukura muranpadulam theriuthu....

    ReplyDelete
  9. TRB யின் பதில் மனுவை பெற்ற உடன் இந்த வழக்கில் மனுதாரர் உடைய மனு தள்ளுபடி செய்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கும்... ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்தில் பணி நியமனம் நடைபெறும்.....

    ReplyDelete
  10. தமிழில் தகுதி அடையாதவர்களும் முதன்மை பாடத்தில் முக்கி முட்டுக் கிட்டு இருப்பவர்களின் ஒப்பாரி தான் இந்த வழக்கு.....

    ReplyDelete
  11. Ethana peroda life a keduthu vachurukanuga parunga....

    ReplyDelete
  12. 10 years ha wait pandram ellarum re exam nu sollittu iruntha ellarum vettula thaan irukkanum,

    ReplyDelete
    Replies
    1. Oru potti thervu enbathu palarathu life sambanthapattathu enave question eduppavargal en ithai ninaivil kolvathillai..anaithu question um sariaga irundal mattume athi oru potti thervu allathu athu palar patipadaya vali vagukkirathu

      Delete
  13. Let's make sure everyone gets justice or no one is affected in this process.

    ReplyDelete
  14. TRB la 4 officer la suspension panna NXT time same mistake varaadhu

    ReplyDelete
  15. Case pottu 3000 peru life a kedutha nalla ullangal life nallaarukkum kadavul arulaal... Question mistake nu solravanuga mathavanugalukum athethan nu yen puriyamatikuthu nu therila... Mistake poga remaing question correct thana kettanga.. atha correct a eluthi CV ponavana epdi kedukuringa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி