நெட், செட் நடக்காததால் பேராசிரியர் தேர்வு ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2024

நெட், செட் நடக்காததால் பேராசிரியர் தேர்வு ரத்து

 

அரசு கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வு, வரும் 4ம் தேதி நடக்கவிருந்த நிலையில், திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், 164 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 4,000 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கவிருந்த தேர்வுக்கு, ஏற்கனவே பலர் விண்ணப்பித்து உள்ளனர்.


இந்நிலையில், நிர்வாக காரணங்களால், இந்த தேர்வை தள்ளி வைப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்தது. தேர்வு நடக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.


உதவி பேராசிரியர் தேர்வுக்கு, முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அவர்கள், மத்திய அரசு நடத்தும், 'நெட்' அல்லது மாநில அரசு நடத்தும், 'செட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஆனால், இந்த ஆண்டு ஜூன் 7, 8ம் தேதிகளில், தமிழக அரசின் சார்பில் நடத்தப்படவிருந்த செட் தேர்வு, தொழில்நுட்ப காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.


அதேபோல், ஜூன் 19ல் நடத்தப்பட்ட, மத்திய அரசின் நெட் தேர்விலும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதால், அந்த தேர்வை யு.ஜி.சி., ரத்து செய்தது.


எனவே, நெட், செட் தேர்வு நடத்தாத நிலையில், தமிழக அரசின் உதவி பேராசிரியர் பதவிக்கான தேர்வு நடத்தினால், சட்டச் சிக்கலாகும் என்பதால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

4 comments:

  1. பொருத்தமில்லாத காரணம், ஏனெனில் யுஜிசி விதிப்படி நெட் அல்லது செட் தேர்வானவர்கள் மட்டுமே உதவிப்பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கவே முடியும் ஆனால் செட் தேர்விற்கு விண்ணப்பம் செய்தாலே உதவிப்பேராசிரியர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம் என்ற அரசின் முடிவு ஏற்கத்தக்கது அன்று.

    மேலும் இந்த முறை நெட் செட் தேர்வுதான் தள்ளிவைக்கப்பட்டுள்ளது அதற்காக இதற்கு முன்பு தேர்வானவர்கள் எழுதலாமே

    தவறான முடிவுகளை எடுத்துவிட்டு அதைக்காரணம் காட்டியே தேர்வைத் தள்ளிவைப்பது தவறே

    ReplyDelete
  2. Arrs trb நடப்பது 100% உறுதி

    ReplyDelete
  3. Already so many litigation in court even set is over they never conduct exam easily then higher education not in a mood to conduct this selection process because cheaper guest lecturer are there

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி