எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று(ஆகஸ்ட் 19) அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். வரும் ஆகஸ்ட் 21ம் தேதி மருத்துவ தேர்வுக்குழு, மூலமாக முதல் கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. 720 மதிப்பெண் பெற்று நாமக்கல் மாணவர் ரஜினீஷ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
2024-25ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை இன்று(ஆகஸ்ட் 19) அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 21ம் தேதி துவங்குகிறது. மொத்தம் 43,063 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 2721 பேர் அதிகம். 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 3733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
நாமக்கல் மாணவர்
தரவரிசை பட்டியலில், 720 மதிப்பெண் பெற்று நாமக்கல் மாணவர் ரஜினீஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தை சென்னை மாணவர் சையது யூசுப்பும், 3வது இடத்தை சென்னை மாணவி சைலஜாவும் பிடித்தனர்.
4ம் இடத்தை ஸ்ரீராமும், 5ம் இடத்தை ஜெயதி பூர்வஜாவும் பிடித்தனர். 6வது இடத்தை நாமக்கல் மாணவர் ரோகித்தும், 7வது இடத்தை சபரீசனும் பிடித்துள்ளனர்.
7.5சதவீத இடஒதுக்கீடு
அரசு பள்ளிகளுக்கான தரவரிசை பட்டியலில் மாணவி ரூபிகா முதலிடம் பிடித்துள்ளார். 2ம் இடத்தை சென்னை சைதாப்பேட்டை பள்ளி மாணவி காயத்ரி தேவியும், 3வது இடத்தை தண்டராம்பட் மாணவி அனுஷியாவும் பிடித்தனர்.
வெளிப்படைத் தன்மை
சைதாப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் இருவர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். கடந்தாண்டை விட 150 மாணவர்களுக்கு கூடுதலாக இடம் கிடைத்துள்ளது. முதன்மை பெற்ற 10 மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளிப்படைத் தன்மையோடு பணியாற்றி, பட்டியலை வெளியிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி