ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2024

ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு

 


2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று பள்ளியில் விழா முடித்து அன்று விடுமுறை ஆகும். அடுத்த நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வரையறுக்க பட்ட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆகஸ்ட் மாதத்திற்கான புதிய நாட்காட்டியில் 17 மற்றும் 18ஆம் தேதி சனி ஞாயிறு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது 


அடுத்ததாக 19.08.2024 திங்களன்று ரிக் உபகர்மா வரையறுக்க பட்ட விடுமுறை வருகிறது. மேலும் 20.08.2024 செவ்வாய் அன்று காயத்ரி ஜெபம் வரையறுக்கப்பட்ட விடுமுறை வருகிறது.


ஆகவே தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறை பெற ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கின்றது. இந்த விடுப்பானது இதுவரை வரையறுக்கப்பட்ட விடுமுறை ஒன்று கூட எடுக்காத ஆசிரியர்களுக்கு பயன்படலாம். எனவே ஆசிரியர்கள் தங்களின் பள்ளியின் பிற ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் தங்களின் பயணங்களை விடுமுறை நாட்களைக் கொண்டு அமைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது


RL leave in August 2024 - ஆகஸ்ட்


03.08.2024, சனி - ஆடி பெருக்கு


16.08.2024, வெள்ளி - வரலட்சுமி விரதம்


19.08.2024, திங்கள் -  ரிக் உபகர்மா/யஜுர் உபகர்மா/ஆவனி அவிட்டம்


20.08.2024, செவ்வாய் -  காயத்ரி ஜெபம்

1 comment:

  1. பள்ளியை யார் பார்ப்பது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி