பள்ளி வளாகங்களில் அங்காடிகள் / சிற்றுண்டி கடைகள் இருந்தால் அகற்ற உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2024

பள்ளி வளாகங்களில் அங்காடிகள் / சிற்றுண்டி கடைகள் இருந்தால் அகற்ற உத்தரவு.

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய / நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அங்காடிகள் / சிற்றுண்டி கடைகள் ( Snacks Shops ) , எழுதுபொருள் அங்காடிகள் ( Stationery Shops ) , போன்ற எந்த அங்காடிகளும் பள்ளி வளாகத்திற்குள் செயல்படக்கூடாது எனவும் செயல்பட்டால் உடன் அதனை அகற்றிட கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 மேலும் அடுத்த வேலை நாள் முதல் 11.09.2024 பள்ளிகளில் இது போன்ற ( பள்ளியால் நடத்தப்படும் அங்காடி உட்பட ) அங்காடிகள் செயல்படுவதாக தெரியவந்தால் தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய / நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி