மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம்: அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி மீண்டும் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2024

மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம்: அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி மீண்டும் விளக்கம்.

மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் தொடர்பாக அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய மகாவிஷ்ணுவை, சென்னை விமான நிலையத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மகாவிஷ்ணுவின் பேச்சைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, சைதாப்பேட்டை காவல்நிலையம் மற்றும் அசோக் நகர் காவல்நிலையத்தில் அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.


 இந்த நிலையில் மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் குறித்து அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.மாறுபட்ட தகவல்களை கூறியதால் விளக்கத்தை ஏற்க மறுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உண்மையான தகவல்களை கூற வேண்டும் என கண்டித்திருந்தார். இதை தொடர்ந்து நேற்று 2வது முறையாக புதிய விளக்கத்தை தமிழரசி அளித்துள்ளார். அதில், மகாவிஷ்ணுவை அறிமுகம் செய்து வைத்தது யார்? நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தது யார்? போன்றவற்றை கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாருடைய அனுமதியின் பேரில், மகாவிஷ்ணு பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார் போன்ற கேள்விகளுக்கும் தமிழரசி விளக்கம் அளித்துள்ளார். விசாரணை முடிவடைந்துவிட்டதால், இன்றோ அல்லது நாளையோ, தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு இது ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு அமைச்சரலாம் செய்றாங்களே இதெல்லாம் நல்லதுக்கா.

    ReplyDelete
  2. mahavishnu sarchaiya... nan oru hindu... nan padichathu aided christian institution... anga kuda christian religious sammanthamana neraya prasangam nadakum... nanga atha sarchaiya pakalaye...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி