காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2024

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 

தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகள் மற்றும் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. தேர்வு முடிந்ததும், வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் 2-ந்தேதி (புதன்கிழமை) வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும், காலாண்டு விடுமுறைக்கு பின்னர், வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆசிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க, காலாண்டு விடுமுறை 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, விடுமுறை முடிந்து வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.


இந்த நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களின்போது பள்ளிகளில் எந்த விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.


அதன்படி, "28-ந்தேதி முதல் அக்.6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக் கூடாது. பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் திருத்திய விடைத்தாள்கள் அளிக்கப்பட வேண்டும்" என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது

2 comments:

  1. எந்த ஆசிரியரும் விடுமுறை கேட்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்

    ReplyDelete
  2. Special class கண்டிப்பாக நடக்க வேண்டும் என பள்ளி அளவில் உத்தரவு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி