ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கலைத்திருவிழா போட்டிகள் - பள்ளி அளவிலான போட்டிகள் நடத்திட கால அவகாசம் நீட்டிப்பு - சார்ந்து SPD Proceedings
பார்வை 1 மற்றும் 2 ஆகியவற்றின்படி 2024 -25 ஆம் ஆண்டிற்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடத்துவது சார்ந்து தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்துவதற்கான கால வரம்பு நீட்டிப்பு சார்ந்து மாவட்டங்களிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றதைத் தொடர்ந்து , பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றியாளர்களின் விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்வதற்கு 27.09.2024 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது . இப்போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ( சிறப்புப் பள்ளிகள் உட்பட ) அனைத்து மாணவ , மாணவியருக்கும் வாய்ப்பளித்தல் வேண்டும் . இந்த விவரத்தினை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ( சிறப்புப் பள்ளிகள் உட்பட ) தெரிவித்து மாணவர்களை பங்கேற்க அறிவுறுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காலம் கடந்த நடவடிக்கை. பலர் பல்வேறு பணிகளுக்கு இடையே அவசர கதியில் நேரமின்மை காரணமாக கலை திருவிழா மிகுந்த சிரமத்துடன் நடத்தி முடித்து விட்டனர்.. அப்போது பலர் கூடுதல் நாள் கோரிக்கை கேட்டும் கண்டு கொள்ளவில்லை. தற்போது அளித்திருப்பது பயனற்றது பலருக்கு. இனி வரும் காலங்களிலும் முடிவுகள் தாமதாக இல்லாமல் இருந்தால் பயன் அளிக்கும்
ReplyDelete