மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் முகநூல் பதிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2024

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் முகநூல் பதிவு.


தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( டிட்டோ ஜாக் ) 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தது.
ஆசிரியப் பெருமக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தலைமைச் செயலகத்தில் டிட்டோ ஜாக் நிர்வாகிகளுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

 இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்களின் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்கள் . டிட்டோ ஜாக் நிர்வாகிகளின் கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளோம் .

5 comments:

  1. எந்த மாற்றமும் நிகழாது, எந்த நல்ல முடிவும் வராது, நிதிநிலை சரியான பின்பு நீங்கள் கேட்டதை விட நிறைய கிடைக்கும், உங்கள் கனவு நனவாகும் பயப்பட வேண்டாம்

    ReplyDelete
  2. சொன்ன சொல் தீராத அரசு, தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும், சற்று காத்திருங்கள் நிதிநிலை சரியான பின்பும் புதுப் எல்லாம் நடக்கும்

    ReplyDelete
  3. கனவு காணுங்கள் திரு அப்துல்கலாம் அவர்கள் சொன்னபடி நல்லது நடக்கும்

    ReplyDelete
  4. 4 வருடமாக நிதி நிலை சரியாகவில்லையா

    ReplyDelete
  5. எப்படி நிதி சரியாகும் ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி