எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2024

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது

 

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ்படிப்புகளுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.


இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவில், 681 எம்பிபிஎஸ் இடங்களும், 971 பிடிஎஸ் இடங்களும் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்கான 3-ம் சுற்று (மாப் அப்) கலந்தாய்வுக்கான பதிவு https://tnmedicalselection.net/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் நேற்று தொடங்கியது. கல்லூரிகளில் இடங்களை வரும் 12 முதல் 14-ம் தேதிவரை தேர்வு செய்யலாம். தரவரிசைப்படி இடங்கள் பெற்றவர்கள் விவரங்கள்வரும் 17-ம் தேதி வெளியிடப்படும். இடஒதுக்கீடு பெற்றவர்கள் வரும் 23-க்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி