தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 2040 இடங்களை ஒற்றைச்சாளர முறையில் நிரப்புவதற்கான நேரடி கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடிவெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் அக்டோபர் 14 முதல் 19வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கலந்தாய்வு 14-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், கலந்தாய்வு முடிவடைந்தது. இதன்படி, அரசு கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. ஆனால், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஏறத்தாழ 600 இடங்கள் காலியாகவுள்ளன. கலந்தாய்வு பணிகள் முடிவுற்று அக்டோபர் 23-ம் தேதி முதலாம் ஆண்டு பி.எட். மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க கல்லூரி கல்வி இயக்ககம் திட்டமிட்டிருந்தது. கனமழை காரணமாக கலந்தாய்வு தள்ளிச்சென்றிருப்பதால் முதல் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்குவது தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியியல் கல்லூரி முதல்வர் டி.எஸ்.சுபாஷினியிடம் கேட்டபோது,‘‘காலியிடங்கள், வகுப்புகள் தொடங்குவது குறித்து கல்லூரி கல்வி ஆணையரிடம் ஆலோசித்து முடிவுசெய்யப்படும்’’ என்றார்.
Respected Admin Sir.....
ReplyDeleteD.T.Ed + TET PAPER 1 + UG DEGREE கல்வித் தகுதியுடன் அரசு பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் TET PAPER 2 தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தகுதி உடையவரா?
அதாவது B.ED படிக்காமல் UG + TET PAPER 2 தேர்ச்சி பெற்றவர் பட்டதாரி ஆசிரியராக நியமனம் மற்றும் பதவி உயர்வு பெற தகுதி உடையவரா?
என்பதை தெரிவிக்க வேண்டும் என்று தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
BEd padikkama neenga tet paper 2 apply pannave mudiyaatheee....
Delete